“ஆண்டவரின் அன்பு பரிசு“ .. நச்சுனு முத்தம் கொடுத்த கமல்.. நெகிழ்ந்து போன ரோபோ ஷங்கர் !

சென்னை : கமலஹாசனின் தீவிர ரசிகரான நடிகர் ரோபோ ஷங்கருக்கு அன்பான பரிசு ஒன்றை அளித்துள்ளார் கமல்ஹாசன்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம். இப்படம் விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்துள்ளது.

விக்ரம் படத்தின் வெற்றியால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் கமல்ஹாசன். பட வெற்றியை பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.

விக்ரம்

விக்ரம்

கைதி, மாஸ்டர் திரைப்படங்களுக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் விக்ரம் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இத்திரைப்படம் ஜூன் 3ந் தேதி பான் இந்திய திரைப்படமாக வெளியானது. இப்படத்தில் கமல், விஜய்சேதுபதி, பகத் பாசில், சூர்யா, காயத்ரி, மைனா நந்தினி ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம், இந்தி என வெளியான அனைத்து மொழியிலும் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்து உள்ளது.

அனைவருக்கும் அன்பு பரிசு

அனைவருக்கும் அன்பு பரிசு

தற்போது விக்ரம் படம் 300 கோடிக்கும் மேல் வசூல் சாதனையை கடந்து போய்க் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு ஒரு கார் பரிசளித்தார் கமல். அதையடுத்து உதவி இயக்குனர்களுக்கு பைக், சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்தார்.

தீவிர ரசிகன்

தீவிர ரசிகன்

இந்நிலையில், கமல்ஹாசனின் தீவிர ரசிகரான நடிகர் ரோபோ ஷங்கருக்கு நச்சுனு ஒரு முத்தத்தை பரிசாக அளித்துள்ளார். ஆண்டு தோறும் கமலஹாசனின் பிறந்தநாள் வந்துவிட்டால் முதல் வேலையாக அவரை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டு நலத்திட்ட உதவிகள் செய்வதை ரோபோ ஷங்கர் வழக்கமாக வைத்துள்ளார்.

தடபுடலான கொண்டாட்டம்

தடபுடலான கொண்டாட்டம்

பல வருடங்கள் கழித்து கமலஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. படம் வெளியான நாள் முதலே திரையரங்குகளுக்கு நேரில் சென்று கமலஹாசன் என்ட்ரியாகும் போது ஆரத்தி எடுத்து தடபுடலாக கொண்டாடி வருகிறார் ரோபோ ஷங்கர்.

நச்சுனு முத்தம்

நச்சுனு முத்தம்

ரோபோ ஷங்கரின் அன்பால் நெகிழ்ந்து போன கமல்ஹாசன் அவரை சந்திக்க வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து, குடும்பத்துடன் கமல்ஹாசனை நேரில் சந்தித்த ரோபோ ஷங்கர் ஆண்டவரிடம் அன்பாக முத்தத்தைக் கேக்க அவரும் கன்னத்தில் முத்தத்தைக் கொடுக்க திக்குமுக்காடிப் போன ரோபோ ஷங்கர் உற்சாகத்தில் இருக்கிறார். சோஷியல் மீடியாவில் இந்த புகைப்படம் டிராண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X