கமல் -சுந்தர் சியோட பெஸ்ட் படம் அன்பே சிவம்.. குஷ்பூவுக்கும் இந்தப் படம்தான் பேவரிட்டாம்!

சென்னை : கமல் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2003ம் ஆண்டில் வெளியானது அன்பே சிவம்.

இந்தப் படம் வசூல் ரீதியாக வரவேற்பை பெறவில்லை என்றபோதிலும் விமர்சன ரீதியாக கமலுக்கும் சுந்தர் சிக்கும் நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

இதனிடையே இந்தப் படம் குறித்து தற்போது நடிகை குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் பேசியுள்ளார்.

அன்பே சிவம் படம்

அன்பே சிவம் படம்

நடிகர் கமல்ஹாசனின் சிறப்பான நடிப்பில் கடந்த 2003ம் ஆண்டில் வெளியானது அன்பே சிவம். சுந்தர் சி இயக்கத்தில் வெளியான இந்தப் படம் வசூல்ரீதியாக வரவேற்பை பெறவில்லை என்ற போதிலும் விமர்சன ரீதியாக அனைத்து தரப்பினரையும் கவர்ந்து கமலுக்கும் சுந்தர் சிக்கும் நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

கதை, திரைக்கதையை எழுதிய கமல்

கதை, திரைக்கதையை எழுதிய கமல்

கமல், மாதவன், நாசர், கிரண் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்தப் படத்தில் கமல் மாறுபட்ட கேரக்டரில் நடித்திருந்தார். வித்யாசாகர் இசையில் லட்சுமி மூவி மேக்கர்ஸ் இந்தப் படத்தினை தயாரித்திருந்தனர். படத்தின் கதை, திரைக்கதையை கமல் மேற்கொள்ள இயக்கத்தை சுந்தர் சி ஏற்றிருந்தார்.

சுந்தர் சியின் முக்கியமான படம்

சுந்தர் சியின் முக்கியமான படம்

எப்போதுமே நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை இயக்கிவரும் சுந்தர் சி, அரண்மனை போன்ற பேய்க்கதைகளிலும் நகைச்சுவையை கூடுதலாக சேர்த்து ரசிகர்களை கவர்ந்து வருபவர். நகைச்சுவை படங்களை எடுத்து ரசிர்களை கவர்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்ற நிலையில், அதை மிகவும் இயல்பாக தன்னுடைய படங்களில் மேற்கொண்டு வருபவர்.

அழுத்தமான கதைக்களம்

அழுத்தமான கதைக்களம்

இதனிடையே அன்பே சிவம், சுந்தர் சியின் மாறுபட்ட இயக்கத்தை வெளிப்படுத்தியது. மிகவும் அழுத்தமான கதைக்களத்தோடு இந்தப் படத்தை அணுகியிருந்தார் சுந்தர் சி. இந்தப் படம் தற்போதும் ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் படம் வெளியானபோது வசூல்ரீதியாக வெற்றியை கொடுக்கவில்லை.

திரையரங்கில் மீண்டும் ரிலீஸ்

திரையரங்கில் மீண்டும் ரிலீஸ்

இந்தப் படம் 20 ஆண்டுகளை கடந்த நிலையில் நேற்றைய தினம் விருகம்பாக்கத்தில் உள்ள திரையரங்கில் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பார்க்க வந்தனர். இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்க்க வேண்டும என்ற தங்களது ஆசை பூர்த்தியாகியுள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்தனர்.

குஷ்பூவின் பேவரிட் படம்

குஷ்பூவின் பேவரிட் படம்

இதனிடையே இந்தப்படம் தனக்கும் தன்னுடைய கணவர் சுந்தர் சிக்கும் எப்போதுமே பிடித்தமான படம் என்று நடிகை குஷ்பூ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தப் படம் வெளியான சமயத்தில் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரசிகர்களின் வரவேற்பு

ரசிகர்களின் வரவேற்பு

நடிகர் கமல்ஹாசனுக்கும் தன்னுடைய கணவர் சுந்தர் சிக்கும் இந்தப் படம் பெஸ்ட் படமாக அமைந்ததாகவும் ஆனால் வசூல்ரீதியாக ஏனோ படம் நினைத்த வெற்றியை கொடுக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தற்போது ரசிகர்களின் வரவேற்பு மகிழ்ச்சியை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X