இதுமாதிரிலாம் எப்போவாதுதான் நடக்கும்.. சார்பட்டா படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய கமல்ஹாசன்!

சென்னை: சார்பட்டா பரம்பரை படக்குழுவினரை நடிகர்
கமல்ஹாசன் நேரில் அழைத்து பாராட்டிய போட்டோக்கள்
இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறார்.

சார்பட்டா பரம்பரை படம் கடந்த மாதம் 21ஆம் தேதி அமேஸான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சமீப காலத்தில் தமிழ் சினிமாவில் வெளி வந்த படங்களில் சிறந்த படமாக சார்பட்டா பரம்பரை திரைப்படம் இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஒவ்வொருவருமே சிறப்பு

ஒவ்வொருவருமே சிறப்பு

இப்படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். ஆர்யா, பசுபதி, ஜான் கோக்கேன், ஜான் விஜய், ஷபீர் கல்லரக்கல், துஷாரா விஜயன், சஞ்சனா நடராஜன், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒவ்வொருவருமே தங்களின் கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்.

காட்சிகளை வைரலாக்கும் ரசிகர்கள்

காட்சிகளை வைரலாக்கும் ரசிகர்கள்

குறிப்பாக ரங்கன் வாத்தியாராக வந்த பசுபதி, டாடியாக நடித்த ஜான் விஜய், டான்ஸிங் ரோஸாக நடித்த ஷபீர் கல்லரக்கல், கபிலனாக நடித்த ஆர்யா ஆகியோர் சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் நடிப்பின் உச்சத்தை தொட்டுள்ளனர். இவர்கள் நடித்த காட்சிகளை மட்டும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பாராட்டு

ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பாராட்டு

இளைஞர்கள் அவர்களின் வீடியோக்களுக்கு டப்ஸ் மேஷ் செய்து வருகின்றனர். அந்தளவுக்கு இவர்களின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை பார்த்த ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் என பலரும் படத்தை மீண்டும் மீண்டும் பார்த்து வருவதாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சார்பட்டா குழுவுக்கு கமல் பாராட்டு

சார்பட்டா குழுவுக்கு கமல் பாராட்டு

இந்நிலையில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகரும் உலகநாயகன் என அழைக்கப்படுபவருமான நடிகர் கமல்ஹாசன் சார்பட்டா படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். மேலும் சிறப்பான ஒரு வெற்றியை பெற்ற படக்குழுவுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

சார்பட்டா குழுவுக்கு கமல் பாராட்டு

சார்பட்டா குழுவுக்கு கமல் பாராட்டு

இந்நிலையில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகரும் உலகநாயகன் என அழைக்கப்படுபவருமான நடிகர் கமல்ஹாசன் சார்பட்டா படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். மேலும் சிறப்பான ஒரு வெற்றியை பெற்ற படக்குழுவுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

கடின உழைப்பும் நடிப்பும்

கடின உழைப்பும் நடிப்பும்

இந்த சந்திப்பில் இயக்குநர் பா ரஞ்சித், ஆர்யா, பசுபதி, ஜான் விஜய், ஷபீர் கல்லரக்கல், சரவண வேல், சாண்டி உட்பட படக்குழுவினர் பலரும் பங்கேற்றனர். அனைவருடனும் கலந்துரையாடிய நடிகர் கமல்ஹாசன், அவர்களின் கடின உழைப்பையும் நடிப்பையும் பாராட்டினார்.

தெறிக்க விடும் போட்டோக்கள்

தெறிக்க விடும் போட்டோக்கள்

நடிகர் ஆர்யா மற்றும் இயக்குநர் ரஞ்சித் ஆகியோரை தனியாக அழைத்தும் பேசினார் கமல்ஹாசன். நடிகர் கமல் ஹாசன் சார்பட்டா பரம்பரை படக்குழுவினரை நேரில் சந்தித்து பாராட்டிய போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கமல் பாராட்டு - பெரும் உற்சாகம்

கமல் பாராட்டு - பெரும் உற்சாகம்

தவிர்க்க முடியாத வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குனர் பா. இரஞ்சித், மற்றும் குழுவினருக்கும், இதில் நடித்த நடிகர்கள் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்து வாழ்த்தும் பாராட்டும் பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளதாக படக்குழுவினர் பெருமிதத்துடன் தெரிவித்து வருகின்றனர்.

Recommended Video

அந்த இரண்டு நடிகர்கள் - Vera Level | Director Vasanth | Navarasa | Filmibeat Tamil
எளிதில் பாராட்டி விட மாட்டார்

எளிதில் பாராட்டி விட மாட்டார்

நடிகர் கமல்ஹாசனும் வெகு சாதாரணத்தில் இப்படி எந்த படக்குழுவையும் அழைத்து பாராட்டி விட மாட்டார். 1970களில் வட சென்னையில் பிரபலமாக இருந்த குத்துச்சண்டையை அப்போதைய அரசியல் சம்பவங்களை வைத்து படமாக்கியிருந்தார் பா ரஞ்சித்.

பெருமை பட வேண்டிய விஷயம்

பெருமை பட வேண்டிய விஷயம்

சுமார் 3 மணி நேரம் செல்லும் படத்தில் ஒரு காட்சி கூட சலிப்பை ஏற்படுத்தவில்லை. தொடக்கம் முதல் இறுதி வரை அடுத்து என்ன அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பிலேயே படத்தை கொண்டு சென்றுள்ளார் இயக்குநர் பா ரஞ்சித். படத்தில் நடித்துள்ள நடிகர் நடிகைகளின் உழைப்புக்கு பலனாக நடிப்பு அசுரனான நடிகர் கமல்ஹாசனே அவர்களை அழைத்து பாராட்டியிருப்பது நிச்சயம் பெருமைப்பட வேண்டிய விஷயம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X