Don't Miss!
- News
இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை தர கூடாது என கட்சிகளுக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்
- Finance
தைவான் மீது கைவைக்க தயங்கும் சீனா.. இதுதான் காரணமா..?
- Automobiles
60 லட்சம் கிலோ எடையை இழுத்து கொண்டு அசால்டாக 120 கி.மீ வேகத்தில் செல்லும் ரயிலை பற்றி கேள்விபட்டுள்ளீர்களா?
- Lifestyle
இந்த 4 ராசிகள் ஸ்ரீ கிருஷ்ணருக்கு ரொம்ப பிடித்த ராசிகளாம்... இந்த அதிர்ஷ்ட ராசிகளில் உங்க ராசி இருக்கா?
- Sports
ப்ளேயிங் 11ல் 5 ஓப்பனிங் வீரர்கள்.. ஜிம்பாப்வே தொடரில் வித்தியாசமான இந்திய அணி.. இதை கவனத்தீர்களா??
- Technology
Gmail Tips- ஒரே க்ளிக்கில் மொத்த Inbox-ஐ டெலிட் செய்யலாம்!
- Travel
உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தில் பறந்த இந்திய தேசக் கொடி!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
ஐக்கிய அரபு அமீரக அமைச்சரை சந்தித்த கமல்ஹாசன்.. டிரண்டாகும் போட்டோ!
சென்னை : நடிகர் கமல்ஹாசன், ஐக்கிய அரபு அமீரக அமைச்சரைச் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியானத் திரைப்படம் விக்ரம். இப்படத்தில் சூர்யா, காயத்ரி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், விஜய் சேதுபதி, செம்பன் வினோத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. அனிருத்தின் மிரட்டலான பின்னணி இசை, கிரீஷ் கங்காதரனின் பிரம்மிப்பூட்டும் ஒளிப்பதிவு என டெக்னிக்கல் ரீதியாகவும் இப்படம் சிறந்து விளங்கியது.

லோகேஷின் பக்கா ஆக்ஷன் திரைப்படமாக வெளியான விக்ரம் திரைப்படம் இதுவரை இல்லாதளவு வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. இன்னும் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதி காணப்படுவதால், விக்ரம் திரைப்படம் உலகளவில் செம்ம வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
கமலின் விக்ரம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 400 கோடி வசூலை நெருங்கியுள்ளது. படம் வெளியாகி 21 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்றும் பல ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிவருகிறது. கமல் நடித்த விஸ்வரூபம் 2 திரைப்படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட எந்த ஒரு தமிழ் படமும் வெளியாகாததால் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்படம் ஜூலை 8ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், துபாய் சென்றுள்ள நடிகர் கமல்ஹாசன், அங்கு ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் முபாரக் அல் நஹ்யானை, அவருடைய மாளிகையில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் வேறுபாடுகளைத் தாண்டி மக்களை ஒன்றிணைக்கும் திரைப்படங்கள் மற்றும் ஊடகங்களின் பங்கு பற்றி விவாதிக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரக அமைச்சரை, நடிகர் கமல்ஹாசன் சந்தித்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
ஸ்ருதிஹாசனுக்கு ரொம்ப பிடித்தவர் இவர் தான்...அப்போ கமல் இல்லையா?