இந்திரஜாவின் குழந்தைக்கு பெயர் வைத்த கமல்ஹாசன்.. என்ன பெயர் தெரியுமா?
சென்னை: ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவிற்கு கடந்த ஆண்டு முறை மாமன் கார்த்திக்குடன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து ஜனவரி மாதம் இந்திரஜாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது, இந்த தகவலை கார்த்திக் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருந்தார். பலரும் இந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை கூறிவந்தனர். தற்போது, இந்த தம்பதி கமல் ஹாசனை சந்தித்த நிலையில், கமல் இவர்களின் குழந்தைக்கு அழகான தமிழ் பெயர் வைத்து பரிசளித்துள்ளார்.
தமிழ் சினிமா பிரபலமான காமெடி நடிகராக வலம் வரும் ரோபோ ஷங்கர் விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சிகளை செய்து தனக்கு என்று தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார். தன்னுடைய நடிப்பாலும், நகைச்சுவை பேச்சாலும், உடல்மொழியாலும் இன்று தவிர்க்க முடியாத நடிகராக இருக்கிறார். இவரின் மகள் இந்திரஜா, அட்லீ இயக்கிய 'பிகில்' படத்தில் பாண்டியம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் வெளிவந்த'விருமன்' படத்தில் அதிதியின் தோழியாக நடித்திருந்தார்.

மகிழ்ச்சியான செய்தி: அதன் பிறகு இவர் படத்தில் நடிக்கவில்லை என்றாலும், இணையத்தில் படு ஆக்டிவாக இருந்து ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இதையடுத்து, கடந்த ஆண்டு முறைமாமன் கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டார். இந்திரஜா- கார்த்திக் திருமணத்தில் வட இந்தியாவில் நடப்பது போல சங்கீத், மெஹந்தி, ஹல்தி எனபடு கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பின் இந்திரஜா- கார்த்திக் இருவரும் விஜய் டிவியில் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கார்த்திக் இந்திரஜா கர்ப்பமாக இருப்பாக அறிவித்தார்.

குழந்தையின் பெயர் என்ன தெரியுமா: இதையடுத்து, ஜனவரி மாதம் இந்திரஜாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்த மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த கார்த்திக், தாய் - சேய் இருவரும் நலமுடன் இருப்பதாகவும் பேரன் பிறந்த சந்தோஷத்தில், ரோபோ ஷங்கரின் குடும்பம் துள்ளி குதித்த வீடியோவை வெளியிட்டு அறிவித்து இருந்தார். இந்நிலையில், இந்திரஜா மற்றும் கார்த்திக் தம்பதியினர், நடிகர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது கமல் குழந்தைக்கு "நட்சத்திரன்" என பெயர் வைத்துள்ளார். இதன் போட்டோக்களை கார்த்திக் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
முன்னதாக இந்திரஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் இயக்கத்தில் Kooran என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், சரவண சுப்பையா, சத்யன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான்,கவிதா பாரதி, இந்திரஜா ரோபோ சங்கர் என பலர் நடித்திருந்தனர். இந்த படம் 28ந் தேதி தியேட்டரில் வெளியான நிலையில் குழந்தை பெற்ற கையோடு படத்தின் ப்மோஷனில் கலந்து கொண்டார்.

கூரன்: கொடைக்கானலில் நாய் தனது குட்டியுடன் சாலையில் சென்று கொண்டிருந்தபோது தன் கண்ணெதிரேயே ஒரு கும்பல் காரை ஏற்றி அந்த குட்டி நாயை கொன்று விடுகின்றனர். அந்தத் தாய் நாய் குரைத்துக் கொண்டே காரைத் துரத்திச் செல்கிறது . தனக்கான நீதி கேட்டு காவல் நிலையம் செல்கிறது, அங்கே அது துரத்தியடிக்கப்படுகிறது. இருந்தாலும் அங்கேயே படுத்துக் கொள்கிறது. அதன் பிறகு வழக்கறிஞர் எஸ். ஏ. சந்திரசேகர் வீட்டுக்குச் செல்கிறது. இதன் உணர்வை புரிந்து கொண்ட வழக்கறிஞர் எஸ்ஏ சந்திரசேகர், அந்த வாயில்லா ஜீவனுக்காக நீதிமன்றத்தில் வாதாடுகிறார். கடைசியில் நாய்க்கு நீதி கிடைத்ததா? இல்லையா என்பது தான் படத்தின் கதை.


Click it and Unblock the Notifications











