Actor Kamal haasan: எனக்கு பார்ட் 2ல தான் வேலை துவங்கும்.. கல்கி 2898 AD படம் குறித்து கமல் ஓபன்!
சென்னை: நடிகர் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன் ஆகியவர்களை வைத்து சர்வதேச தரத்தில் கல்கி 2898 படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் நாக் அஸ்வின். இந்த படத்தின் கதைக்களம் பல ஹாலிவுட் படங்களை நினைவுபடுத்துவதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் மற்ற படங்களின் சாயல் இல்லாமல் ஒரு படத்தை அதுவும் பிரம்மாண்டமான ஒரு படத்தை இயக்குவது சாத்தியமில்லை என்ற விமர்சனங்களும் எழுவதை பார்க்க முடிகிறது.
கல்கி 2898 ஏடி படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடித்துள்ள நிலையில் சில நிமிடங்களே அவரது காட்சிகள் படத்தில் காணப்படுகிறது. இந்நிலையில் இரண்டாவது பாகத்தில் தான் தன்னுடைய வேலை ஆரம்பம் என்று கமல்ஹாசன் தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் அவரது லுக் மற்ற படங்களில் இருந்து வித்தியாசமாக காணப்படுகிறது.

நடிகர் கமல்ஹாசன்: பிரபாஸ். அமிதாப்பச்சன். கமல்ஹாசன். தீபிகா படுகோன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் உருவாகி உள்ளது கல்கி 2898 ஏடி படம். இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் சர்வதேச அளவில் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து படம் முதல் நாளிலேயே 191 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளது. இதுகுறித்து படக் குழுவினர் அறிவிப்பு வெளியிட்டு தங்களது உற்சாகத்தை பகிர்ந்துள்ளனர். இந்த படத்தின் அட்ரக்ஷன்களின் லிஸ்ட் மிகப்பெரிய அளவில் காணப்படுகிறது. எண்பது வயதை கடந்த நிலையிலும் இந்த படத்தில் மாஸ் காட்டியுள்ளார் அமிதாபச்சன்.
கமல்ஹாசன் பாராட்டு: பிரபாஸ் நடிப்பு கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ள நிலையில் தீபிகா படுகோனின் அழுத்தமான கேரக்டர் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் விருந்து வைத்துள்ளது. கமல் இந்த படத்தில் வில்லனாக நடிப்பதற்காக 150 கோடி ரூபாய்களை சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படும் சூழலில் அவரது வில்லன் கேரக்டர் சில நிமிடங்களே படத்தில் வருவது அவரது ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. அதிலும் அவர் தன்னுடைய மிரட்டலான நடிப்பை இரு நிமிடங்கள் மட்டுமே வெளிப்படுத்தி உள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்த படத்தில் தன்னுடைய கேரக்டர் குறித்து நடிகர் கமல்ஹாசன் தற்போது பேசியுள்ளார்.
2வது பாகத்தில்தான் வேலை: இந்த படம் இந்திய சினிமாவை சர்வதேச தரத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன். தற்போது தான் இந்த படத்தை பார்த்து விட்டு வந்ததாகவும் தன்னுடைய கேரக்டர் இந்த படத்தில் மிகவும் குறைவான காட்சிகளுடன் உள்ளதாகவும் இரண்டாவது பாகத்தில் தான் தனக்கு வேலையே துவங்க உள்ளதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை தானும் ஒரு ரசிகனாக கண்டு களித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள நிலையில் அடுத்த பாகத்திற்கான வேலைகளை படக் குழுவினர் விரைவில் துவங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
2வது பாகத்திற்கான எதிர்பார்ப்பு : முதல் பாகத்தை உருவாக்குவதற்கு நான்கு ஆண்டுகள் பிடித்துள்ள நிலையில் இரண்டாவது பாகம் துரிதப்படுத்தப்பட்டு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். படத்தில் விஎஃப்எக்ஸ் காட்சிகள் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன. சந்தோஷ் நாராயணனின் இசை எதிர்பார்த்த அளவில் கவனத்தை பெறவில்லை என்ற நிலையில் இரண்டாவது பாகம், முதல் பாகத்தின் குறைகளை களைந்து சிறப்பான கதைக்களத்துடன் ரசிகர்களை மேலும் மிரட்டும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











