Actor Kamal haasan: எந்திரன் படத்தில் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டேன்.. காரணத்தை சொன்ன கமல்ஹாசன்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்கள் நடித்து கடந்த 2010ம் ஆண்டில் வெளியான படம் எந்திரன். இந்த படம் தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து மாஸ் ஹிட் கொடுத்தது. இந்நிலையில் இந்த படம் குறித்து தற்போது கமல்ஹாசன் தன்னுடைய பேட்டியொன்றில் பேசியுள்ளார்.
எந்திரன் படத்தில் நடிக்க முதலில் தன்னை தான் இயக்குனர் ஷங்கர் அணுகியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வரும் ஜூலை 12ம் தேதி இந்தியன் 2 படம் ரிலீசாகவுள்ள நிலையில், அடுத்தடுத்து இந்தியன் 2 படம் குறித்தும் படக்குழுவினர் குறித்தும் மற்றும் பல சுவாரசிய நிகழ்வுகள் குறித்தும் கமல்ஹாசன் வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது எந்திரன் படம் குறித்து அவர் பேசியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

எந்திரன் படம்: நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களின் நடித்த எந்திரன் படம் கடந்த 2010ஆம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. ஷங்கர் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் முதல் முறையாக ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். ரஜினிகாந்த் ரோபோட்டாக நடித்திருந்த இந்த படம் விஷுவலாகவும் படத்தின் கதைக்களம் மூலமாகவும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் குவித்தது. படத்தில் வசீகரன் என்ற சயின்டிஸ்ட்டாக ரஜினிகாந்த் நடித்திருந்தார்.
ரஜினிகாந்த் -ஐஸ்வர்யா ராய் ஜோடி: வசீகரன் உருவாக்கிய ரோபோட் எப்படி அவருக்கு எதிராகவே திரும்புகிறது என்பது இந்த படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்தப் படத்தில் தன்னைவிட 22 வயது குறைந்த ஐஸ்வர்யா ராயுடன் ரஜினி இணைந்து ய் நடித்திருந்தார். இந்நிலையில் இந்த படம் குறித்தும் ஐஸ்வர்யாராய் தன்னுடைய ஜோடியாக நடித்தது குறித்தும் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் ரஜினிகாந்த் பேசியுள்ளார். இந்தப் படம் இந்தியிலும் மிகப்பெரிய ஹிட்டடித்த நிலையில் மும்பையில் நடைபெற்ற படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய ராஜஸ்தானி நண்பர் நந்தலாலிடம் எந்திரன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இணைந்து நடிக்கிறார்கள் என்று தான் கூறியதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் நகைச்சுவை: இதையடுத்து படத்தின் ஹீரோ யார் என்று நந்தலால் கேட்டதாகவும் ஐஸ்வர்யா ராய் என்று தான் கூறிய நிலையில் இதற்கு ஐஸ்வர்யா ராய், அவரது மாமனார் அமிதாப் பச்சன் மற்றும் கணவர் அபிஷேக் பச்சன் எப்படி ஒப்பு கொண்டார்கள் என்று அவர் அதிர்ச்சியுடன் கேட்டதாகவும் தொடர்ந்து அவர் மௌனமாகிவிட்டதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வை நகைச்சுவையாக ரஜினிகாந்த் பேசிய நிலையில் தன்னுடன் ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்ததற்கு அவர் நன்றியும் தெரிவித்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க தன்னிடம் தான் சங்கர் முன்னதாக அணுகியதாக நடிகர் கமல்ஹாசன் தற்போது சீக்ரெட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
எந்திரன் படத்திற்கு கமல் நோ: ஆனால் படத்தில் நடிக்க தான் மறுத்து விட்டதாகவும் கமல் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்தியன் 2 படத்திற்காக கமல்ஹாசன் தொடர்ந்து அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட்டு வரும் நிலையில் எந்திரன் படம் குறித்து அவர் தற்போது மனம் திறந்துள்ளார். எந்திரன் படத்தில் நடிக்க கால்ஷீட், சம்பளம், அப்போதைய மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தான் மறுத்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து இந்த படத்தை ஷங்கர் கைவிட்டு விடுவார் என்று தான் நினைத்ததாகவும் ஆனால் தன்னுடைய நண்பர் ரஜினிகாந்த் இந்த படத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றி படமாக மாற்றியதாகவும் கமல் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மாஸ் காட்டிய எந்திரன் படம்: ரஜினியின் கேரியரில் மிகப்பெரிய ஹிட் கொடுத்த மற்றும் கவனத்தை ஈர்த்தப்படம் எந்திரன். இரண்டு பாகங்களாக இந்த படம் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தில் தான் நடிக்க இருந்ததாக கமல்ஹாசன் கூறியுள்ளது ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. வரும் ஜூலை 12ம் தேதி கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் ஷங்கர் இயக்கத்திலேயே வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த 1996ம் ஆண்டில் வெளியான நிலையில் ஏறக்குறைய 29 ஆண்டுகள் கழித்து ஷங்கர் இயக்கத்திலேயே இந்தியன் 2 படம் உருவாகியுள்ளது. இந்தியன் 3 படமும் மாஸ் காட்ட தயாராகியுள்ளது.


Click it and Unblock the Notifications











