Actor Kamal haasan: நான் இளையராஜா, ஏஆர் ரஹ்மான் ரசிகன்.. விரைவில்.. கமல்ஹாசன் அதிரடி!

சென்னை: நடிகர் கமல்ஹாசன் அடுத்தடுத்து வெற்றிப்பட இயக்குனர்களுடன் இணைந்து வரும் சூழலில் முன்னதாக அவரது விக்ரம் 2 படம் வெளியாகி மாஸ் காட்டியது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கமல் நடிப்பில் கல்கி 2898 ஏடி படம் வெளியானது. இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்து அனைவரையும் கமல்ஹாசன் கவர்ந்துள்ளார்.

இந்நிலையில் வரும் ஜூலை 12ம் தேதி கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் ரிலீசாகவுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில் பட குழுவினர் மலேசியா, சிங்கப்பூர் என அடுத்தடுத்த பிரமோஷன்களில் சர்வதேச அளவில் பங்கேற்று வருகின்றனர்.

Kamal haasan Indian 2 movie Shankar Anirudh tamil cinema 2

நடிகர் கமல்ஹாசன்: நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் வரும் ஜூலை 12ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. கடந்த 1996ம் ஆண்டில் இந்த படத்தின் முதல் பாகம் வெளியான நிலையில் 29 ஆண்டுகளை கடந்து தற்போது படத்தின் 2வது பாகம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. கடந்த 2018ம் ஆண்டிலேயே இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கப்பட்ட நிலையில் சூட்டிங்கில் ஏற்பட்ட விபத்து, தயாரிப்பு தரப்பினருடன் ஷங்கருக்கு ஏற்பட்ட மனக்கசப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த படத்தின் சூட்டிங் முடங்கியது. இந்நிலையில் கடந்த ஆண்டில் இந்த படத்தின் ஷூட்டிங் மீண்டும் தூசி தட்டப்பட்டு தற்போது படம் இன்னும் சில தினங்களில் ரிலீசாகவுள்ளது.

இந்தியன் 2 படம்: முதல் பாகத்தைப் போலவே இந்த படத்திலும் நடிகர் கமல்ஹாசன் சேனாபதி என்ற கேரக்டரில் அதிரடி காட்டியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் ட்ரெயிலர் ரிலீசான நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. முன்னதாக படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. முதல் பாகத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் படத்தின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டடித்த நிலையில் தற்போது 2வது பாகத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். முன்னதாக கமல்ஹாசனின் விக்ரம் 2 படத்திலும் அனிருத் இசையமைத்திருந்தார்.

அனிருத் இசை குறித்த கேள்வி: விக்ரம் 2 படத்தின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டடித்த நிலையில் தற்போது இந்தியன் 2 படத்தின் பாடல்கள் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில் இன்னும் சில தினங்களில் இந்தியன் 2 படம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ள நிலையில் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர், சித்தார்த், எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர். மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இடங்களிலும் படக்குழுவினர் ப்ரோமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரமோஷனின்போது படத்தின் இசையமைப்பாளர் அனிருத் குறித்து கமல்ஹாசனிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இளையராஜா -ஏஆர் ரஹ்மான் ரசிகன்: முதல் பாகத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆன நிலையில் தற்போது இரண்டாம் பாகத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளதை அவர் ஏற்றுக் கொண்டாரா என்று கமல்ஹாசனிடம் கேள்வி கேட்கப்பட்ட நிலையில் இது முற்றிலும் இயக்குனரின் முடிவு என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் தான் எப்போதுமே இளையராஜா மற்றும் ஏஆர் ரஹ்மானின் ரசிகன் என்று அவர் தெரிவித்துள்ளார். கடந்த 40 ஆண்டு காலமாக இளையராஜா இசையை தான் கேட்டு வருவதாகவும் இதே போல கடந்த 30 ஆண்டுகளாக ஏஆர் ரஹ்மான் இசையையும் தான் என்ஜாய் செய்து வருவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

விரைவில் அனிருத் ரசிகனாவேன்: இவர்கள் இசையை தான் புரிந்துக் கொள்ள தனக்கு இத்தனை ஆண்டுகாலங்கள் தேவைப்பட்டுள்ளதாகவும் இதேபோல அனிருத் தற்போது தான் வந்துள்ளார் என்றும் அவரது இசையும் தனக்கு பிடிக்கும் என்று தான் நம்புவதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து அனிருத் அடுத்தடுத்த படங்களை கொடுத்து வருகிறார். அவரது இசையமைப்பில் அடுத்ததாக விடாமுயற்சி உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன. இந்நிலையில் கமல்ஹாசனின் விக்ரம் 2 படத்தை தொடர்ந்து இந்தியன் 2 படத்தில் அவர் இசையமைத்துள்ளார். படத்தின் இரு பாடல்கள் வெளியான நிலையில், இந்த படத்திலும் அனிருத் சிறப்பாக ஸ்கோர் செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X