இந்தியன் 3 படத்தின் கதையையும் சேர்த்து சொன்னதால்தான் இந்தியன் 2 படத்தில் நடித்தேன்.. கமல் உற்சாகம்!
சென்னை: நடிகர் கமல்ஹாசன் -இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் இந்தியன் 2. இந்த படத்தின் அடுத்த பாகமாக இந்தியன் 3 படமும் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்நிலையில் வரும் ஜூலை மாதத்தில் இந்தியன் 2 படமும் அடுத்த ஆண்டு ஜனவரியில் இந்தியன் 3 படமும் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனிடையே இந்தியன் 2 படத்தின் ப்ரோமோஷன்களை படக்குழுவினர் துவங்கியுள்ளனர். இன்றைய தினம் ஐபிஎல் கிரிக்கெட் லைவில் கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் இருவரும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழுக்காக பேசினர். இதையடுத்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அவர்கள் படம் குறித்தும் மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்தும் பேசியுள்ளனர்.

இந்தியன் 2 படம்: நடிகர் கமல்ஹாசன். காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தியன் 2 படம் ஜூலை மாதத்தில் ரிலீசாகவுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் முன்னதாக ஜூன் மாதத்திலேயே வெளியாக உள்ளதாக லைகா அறிவித்திருந்தது. ஆனால் திட்டமிட்டபடி இந்த படத்தின் சூட்டிங் நிறைவடையவில்லை. படத்தின் ஒரு பாடல் காட்சி எடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் விரைவில் இந்த பாடல் காட்சியின் சூட்டிங் எடுத்து முடிக்கப்பட்டு, வரும் ஜூலை இரண்டாவது வாரத்தில் இந்தப் படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தியன் 2 பட பிரமோஷன்: இதனிடையே இந்த படத்தின் ப்ரோமோஷன்களையும் படக் குழுவினர் துவங்கியுள்ளனர். இன்றைய தினம் பெங்களூரில் நடக்கும் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான கிரிக்கெட் லைவ்வில் பங்கேற்ற கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் இருவரும் படம் குறித்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். இதனிடையே இன்றைய தினம் நடந்து வரும் ஐபிஎல் போட்டி குறித்தும் இருவரும் பேசினர். கோப்பை யாருக்கு என்ற தன்னுடைய அனுமானத்தையும் கமல் பகிர்ந்துள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் மிகப்பெரிய உற்சாகத்தை பதிவு செய்து வருகின்றனர்.
கிரிக்கெட் லைவ் நிகழ்ச்சி: முன்னதாக இந்த லைவ் நிகழ்ச்சிக்காக கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் இருவரும் மும்பை சென்றதை சமூக வலைதளங்கள் வாயிலாக அறிய முடிந்தது. இதனிடையே இந்த படத்தின் இசை வெளியீடு வரும் 1ம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களையும் படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி ஆறு மாதங்கள் கழித்து இந்தியன் 3 திரைப்படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தியன் 3 ரிலீஸ் அப்டேட்: இந்த ஆண்டு டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரியில் இந்தியன் 3 திரைப்படம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்து பேசியுள்ள நடிகர் கமல்ஹாசன், தன்னுடன் இந்தியன் 2 படம் குறித்து விவாதத்தில் ஷங்கர் ஈடுபட்டபோது இந்தியன் 3 படத்திற்கான கதையையும் சேர்த்து கூறியதால்தான் இந்த படத்தில் நடிக்க தான் ஒப்புக்கொண்டதாக அவர் கூறியுள்ளார். இதனிடையே இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 திரைப்படம் குறித்து பேசியுள்ள இயக்குனர் ஷங்கர், இந்தப் படத்தின் கருத்துக்கள் மற்றும் காட்சிகளை ஒரே படத்தில் அடக்க முடியாது என்றும் அதனால் தான் இந்தியன் 3 படம் உருவானது என்றும் தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு: மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்கள். இந்த சூழலில் படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப் போவது ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் குறிப்பிட்டபடி ஜூலை மாதம் இரண்டாவது வாரத்தில் இந்தியன் 2 படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கலாம். மேலும் முதல் பாகம் ஏற்படுத்திய பாதிப்பை இந்தப் படமும் உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











