Indian 2 :முதல் பாகத்தை பார்க்காத இளைஞர்களையும் இந்தியன் 2 கவரும்.. கமல் பளீச்!
சென்னை : நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
கமலுடன் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். இந்தியாவின் பல இடங்களிலும் வெளிநாடுகளிலும் இந்தப் படத்தின் சூட்டிங் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது.
தற்போது படத்தின் சூட்டிங் சென்னையில் நடந்து வருகிறது. ராம்சரண் படத்தின் சூட்டிங்கை ஷங்கர் நடத்தி முடித்துள்ள நிலையில், விரைவில் இந்தியன் 2 படத்தின் சூட்டிங்கையும் முடிக்க திட்டமிட்டுள்ளார்.

இந்தியன் 2 படம் குறித்து பேசிய கமல்ஹாசன் :
நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகிவரும் படம் இந்தியன் 2. இந்தப் படத்தின் முதல் பாகம் வெளியாகி 25 ஆண்டுகளை கடந்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டிலேயே இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தின் சூட்டிங் துவங்கப்பட்ட நிலையில், சூட்டிங்கின் இடையில் ஏற்பட்ட விபத்து, கொரோனா உள்ளிட்ட காரணங்களால் படத்தின் சூட்டிங் இடையில் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் விக்ரம் படம் கொடுத்த சூப்பர் டூப்பர் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்தியன் 2 படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டில் துவங்கப்பட்டு, தற்போது சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படம் இடையில் கைவிடப்பட்ட நிலையில், தெலுங்கில் ராம்சரணின் படத்தில் கவனம் செலுத்திவந்தார் ஷங்கர். இந்நிலையில் அந்தப் படத்தின் சூட்டிங் தற்போது நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது இந்தியன் 2 படமும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முன்னதாக திருப்பதி, சென்னை உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளிலும் தைவான், ஆப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ளது. தற்போது சென்னையில் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் நடந்துவரும் நிலையில், விரைவில் படத்தின் சூட்டிங்கை நிறைவுசெய்ய திட்டமிட்டு ஷங்கர் மும்முரமாக வேலைகளை முடுக்கி விட்டுள்ளார்.
இதனிடையே, நேற்றைய தினம் அபுதாபியில் நடைபெற்ற IIFA International indian film academy awards விருது விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான விருது வழங்கப்பட்டது. அவருக்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இந்த விருதை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சுவாரஸ்யங்கள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலிவுட் நடிகர் சல்மான் கான், கமல்ஹாசன் இருக்குமிடத்திற்கு வந்து அவரை கட்டித் தழுவி தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்தார்.

இதனிடையே, தனக்கு வழங்கப்பட்ட விருதிற்கு நன்றியை பகிர்ந்த கமல்ஹாசன், இடையில் அனைவருக்கும் நன்றி என தமிழில் பேசினார். இதையடுத்து அரங்கமே அதிர்ந்தது. ஏஆர் ரஹ்மானும், தன்னுடைய கட்டை விரலை உயர்த்திக்காட்டி வாழ்த்துக்களை பகிர்ந்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கமல்ஹாசன், பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார். தற்போது இந்தியன் 2 படத்தில் அதே கேரக்டரில் ஆண்டுகளை கடந்து நடிப்பதற்கும் 4 மணிநேரம் மேக்கப் போடுவதற்கும் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், இந்த அனுபவம் சேனாபதி கேரக்டருக்கு மட்டுமில்லாமல், படத்தில் உழைத்துவரும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளார். இந்தியன் படத்தை பார்க்காத இளம் ரசிகர்களுக்கும் இந்தப் படம் சிறப்பான அனுபவத்தை 100 சதவிகிதம் கொடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். நீண்ட நாட்களாக சூட்டிங் நடந்துவரும் இந்தியன் 2 படம் ரசிகர்களின் மிகுதியான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











