Kamal haasan: ரசிகனாக என்னை வச்சு செஞ்சிட்டாரு.. சைமா விழாவில் கமல் சொன்ன விஷயம்!

சென்னை: நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான விக்ரம் படம் இன்டஸ்ட்ரியல் ஹிட்டடித்தது.

இந்தப் படம் சர்வதேச அளவில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து சிறப்பான படமாக அமைந்தது. லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தில் கமலின் ரசிகராக மாஸ் காட்டியிருந்தார்.

Actor Kamal haasan opens up about KH234 movie with Maniratnam to Lokesh kanagaraj

இந்நிலையில் நேற்றைய தினம் விக்ரம் படம் சைமா 2023 விருது வழங்கும் விழாவில் ஏராளமான விருதுகளை அள்ளியுள்ளது. நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பங்கேற்றார்.

KH234 படம் குறித்தும் மணிரத்னம் குறித்தும் பேசிய கமல்ஹாசன்: நடிகர் கமல்ஹாசனுக்கு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் சிறப்பாக கைகொடுத்த படம் விக்ரம். கடந்த ஆண்டில் வெளியான விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். ஒரு ரசிகராக கமலை இவர் இந்தப் படத்தில் சிறப்பாக காட்டியிருந்தார். படம் இன்டஸ்ட்ரியல் ஹிட்டடித்தது. இந்தப் படத்தின் வெற்றி கொடுத்த உற்சாகத்தில் தற்போது நடிகராகவும் தயாரிப்பாளராகவும் உலகநாயகன் உற்சாகமாக பணியாற்றி வருகிறார்.

தற்போது இந்தியன் 2 மற்றும் கல்கி 2898 AD படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இநத்ப் படத்தை அவரது ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனமே தயாரிக்க உள்ளது. அடுத்த மாதத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் KH234 படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற சைமா 2023 விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன், விக்ரம் படம் குறித்தும் தன்னுடைய அடுத்த ப்ராஜெட்கள் குறித்தும் பேசியிருந்தார். அவருக்கு விக்ரம் படத்திற்காக இரண்டு பிரிவுகளில் விருது வழங்கப்பட்டுள்ளது. சிறந்த பின்னணி பாடகர் விருது மற்றும் சிறந்த பாப்புலர் சாய்ஸ் நடிகர் என இரு பிரிவுகளில் சைமா 2023 விருதுகளை பெற்றுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

விக்ரம் படத்திற்காகவே இந்த இரு விருதுகளும் அவருக்கு கிடைத்துள்ளது. விக்ரம் படத்தின் பத்தல பத்தல பாடலுக்காக கமலுக்கு விருது கிடைத்துள்ளது. மேலும் விக்ரம் படத்திற்காக அனிருத், லோகேஷ் மற்றும் வசந்தி உள்ளிட்டவர்களுக்கும் சிறந்த இசையமைப்பாளர், சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த துணை நடிகை உள்ளிட்ட பிரிவுகளில் விருது கிடைத்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் மணிரத்னத்திடம் KH234 படம் குறித்து லோகேஷ் கனகராஜ் கேள்வி எழுப்பியிருந்தார்.

Actor Kamal haasan opens up about KH234 movie with Maniratnam to Lokesh kanagaraj

இதற்கு பதிலளித்த மணிரத்னம், படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் இந்தக் கேள்விக்கு பதிலளிப்பார் என்று குறிப்பிட்டார். இதையடுத்து பேசிய கமல்ஹாசன், KH234 படத்திற்காக மணிரத்னம் ரசிகனாக தன்னை என்ன செய்யனுமோ செஞ்சிட்டாரு என்று லோகேஷிடம் குறிப்பிட்டார். மேலும் இந்தப் படத்திற்காக தான் தாடி வளர்க்க உள்ளதாகவும் தெரிவித்தார். நாயகன் பட காலகட்டத்தில் பணியாற்றியது போல எந்தவிதமான அவசரமும் இல்லாமல் இந்தப் படத்தில் தானும் மணிரத்னமும் பணியாற்ற உள்ளதாகவும் கூறினார்.

இருவரும் இணைந்து சிறப்பான படத்தை உருவாக்குவதையே இலக்காக கொண்டுள்ளதாகவும் இதன்மூலம் ரசிகர்களின் மிகப்பெரிய பாராட்டுக்களை பெற திட்டமிட்டுள்ளதாகவும் கமல்ஹாசன் குறிப்பிட்டார். மேலும் இந்த இலக்கை மையமாக கொண்டு, இந்தப் படத்திற்கான வேலைகளை தாங்கள் நடத்தவுள்ளதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் வெளியான நாயகன் படம், ரசிகர்களின் எவர்கிரீன் பேவரைட்டாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X