Kamal haasan: அடுத்தடுத்த படங்களுக்கு எடுக்கப்படும் லுக் டெஸ்ட்.. மாஸாக தயாராகும் உலகநாயகன்!

சென்னை: நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்தடுத்து இந்தியன் 2 மற்றும் கல்கி 2898 AD படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

இந்த இரு படங்களும் அடுத்த ஆண்டில் ரிலீசாகவுள்ள நிலையில், அடுத்த ஆண்டிலேயே ஹெச் வினோத் இயக்கத்தில் கமல் இணையும் KH233 படமும் ரிலீசாகவுள்ளது.

அடுத்த ஆண்டில் கமல்ஹாசனின் நடிப்பில் அடுத்தடுத்து 3 படங்கள் ரிலீசாகவுள்ளது அவரது ரசிகர்களிடையே மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Actor Kamal haasan planned to go for Look test for his movies KH233 and KH234

அடுத்தடுத்த படங்களுக்காக லுக் டெஸ்ட்டிற்கு திட்டமிடும் கமல்ஹாசன்: நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஆண்டில் விக்ரம் படம் வெளியாகி இன்டஸ்ட்ரியல் ஹிட்டடித்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் தயாரிப்பாளராகவும் கமல்ஹாசனுக்கு சிறப்பாக கைகொடுத்தது. இந்தப் படம் கொடுத்த வெற்றியின் உற்சாகத்துடன் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் களமிறங்கி அடித்து வருகிறார் கமல்ஹாசன். லோகேஷ் இயக்கத்திலேயே விக்ரம் படத்தின் அடுத்த பாகமும் உருவாகவுள்ளதாக முன்னதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார் கமல்ஹாசன். முதல் பாகத்தை போலவே இந்தப் படத்தின் சேனாபதி கேரக்டருக்காக மிகப்பெரிய மெனக்கெடல்களை அவர் கொடுத்துள்ளார். மேக்கப்பிற்காக மட்டுமே தினந்தோறும் 6 மணிநேரங்களை அவர் செலவழித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து பிரபாசுக்கு வில்லனாக கல்கி 2898 AD படத்திலும் நடித்து வருகிறார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையில் இந்த இரு படங்களும் அடுத்த ஆண்டில் வெளியாகவுள்ளன. இந்தப் படங்களை தொடர்ந்து ஹெச் வினோத் இயக்கத்தில் அடுத்ததாக கமல் தன்னுடைய சொந்த தயாரிப்பில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த மாதத்தில் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்தப் படத்தில் கமல்ஹாசன் ராணுவ வீரராக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையொட்டி சமீபத்தில் கமல் துப்பாக்கி பிராக்டீஸ் செய்யும் வீடியோ வெளியாகி ட்ரெண்டானது.

கமல் நடிப்பில் இந்தியன் 2, கல்கி 2898 AD மற்றும் KH233 என அடுத்தடுத்த மூன்று படங்கள் அடுத்த ஆண்டில் வெளியாகவுள்ளன. இந்தப் படங்களை தொடர்ந்து KH234 படத்தையும் தன்னுடைய ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்காக தயாரித்து நடிக்கவுள்ளார் கமல்ஹாசன். இந்தப் படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கவுள்ளார். இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளியான நாயகன் மிகப்பெரிய வெற்றிப்படைப்பானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தன்னுடைய நடிப்பு மற்றும் தயாரிப்பில் அடுத்தடுத்து உருவாகவுள்ள KH233, KH234 படங்களுக்காக நடிகர் கமல்ஹாசனுக்கு அடுத்த மாதத்தில் லுக் டெஸ்ட் எடுக்கப்பட உள்ளதாக தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு படங்களும் வித்தியாசமான ஜானர்களில் உருவாகவுள்ள நிலையில், இந்தப் படங்களில் கமல்ஹாசனின் லுக்கிற்காக டெஸ்ட் எடுக்கப்பட உள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X