K Balachandar: பல கல்வி தந்த ஆசான்.. மறைந்த இயக்குநர் கே பாலசந்தர் நினைவுநாளில் கமல்ஹாசன் உருக்கம்!
சென்னை: இயக்குநர் கே பாலசந்தர் நூறு படங்களுக்கும் மேல் இயக்குநராக செயல்பட்டவர். உத்தமவில்லன், குசேலன் உள்ளிட்ட சில படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ள இவர் கடந்த 2014ம் ஆண்டில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் இன்றைய தினம் தன்னுடைய குருவான கே பாலசந்தரின் நினைவுநாளில் நடிகர் கமல்ஹாசன் அவரை உருக்கத்துடன் நினைவு கூர்ந்துள்ளார்.
சிறப்பான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளால் தன்னுடைய படங்களை மெருகேற்றி, அழியாத பேரை பெற்றவர் கே பாலசந்தர். திரையுலக ஜாம்பவான்களாக திகழும் ரஜினிகாந்த், கமல்ஹாசனை மட்டுமில்லாமல் சவுகார் ஜானகி உள்ளிட்ட பல நடிகைகளையும் சினிமாவிற்கு கொடுத்தவர் கே பாலசந்தர்.

இயக்குநர் சிகரம் கே பாலசந்தர்: இயக்குநர் சிகரம் என்று போற்றப்படுபவர் கே பாலசந்தர். நூற்றுக்கும் மேற்பட்ட வெற்றி படங்களை கொடுத்துள்ள இவர், உத்தம வில்லன், குசேலன் உள்ளிட்ட சில படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். இந்திய சினிமாவின் அடையாளங்களாக பார்க்கப்படும் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மட்டுமில்லாமல் சவுகார் ஜானகி, ஸ்ரீதேவி, சரிதா உள்ளிட்ட பல நடிகைகளையும் இவர் சினிமாவில் அறிமுகப்படுத்தியுள்ளார். நாடகங்கள் மூலமாகவே கவனம் பெற்று சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் கே பாலசந்தர். நீர்க்குமிழி என்ற படம் மூலம் இவர் தமிழ் சினிமாவிற்கு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நிலையில் முதல் படமே மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப் படமாக மாறியது.
மாறுபட்ட கதைக்களங்கள்: அடுத்தடுத்து தன்னுடைய சிறப்பான திரைக்கதை மற்றும் மாறுபட்ட கதைக்களங்கள் மூலமாக தற்போதும் தன்னுடைய படங்களை பேச வைத்துள்ளார் கே பாலசந்தர். இவரது இயக்கத்தில் கடந்த 2006ம் ஆண்டில் பொய் என்ற படம் ரிலீசானது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்கத்தில் கவனம் செலுத்தாமல் நடிப்பில் கவனம் செலுத்தத் துவங்கினார் கே பாலசந்தர். இதனிடையே, கடந்த 2014ம் ஆண்டில் உடல்நலக் குறைவு காரணமாக இவர் உயிரிழந்தார். இவரது இழப்பு திரைத்துறைக்கு மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. அவரது இடத்தை இட்டு நிரப்ப யாரும் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
கே பாலசந்தர் நினைவுதினம்: இந்நிலையில் இன்றைய தினம் கே பாலசந்தரின் நினைவு தினத்தையொட்டி நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் அவரை நினைவு கூர்ந்துள்ளார். கே பாலசந்தரை தன்னுடைய குருவாக பார்க்கும் நடிகர் கமல்ஹாசன், எத்தனை படங்கள், அத்தனையும் பாடங்கள் என்று பாராட்டு தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நடிகருக்கும் பள்ளியாகவும் பல்கலைகழகமாகவும் திகழ்ந்து பயிற்றிப் பல கல்வி தந்த ஆசான் என்றும் பாராட்டியுள்ளார். அவரது நினைவு நாளான இன்று என்று கூறியுள்ள கமல்ஹாசன், அவரிடம் பயின்றவை என்றும் தன்னுடைய நினைவில் நிற்கும், தன்னை வழி நடத்தும் என்றும் அவருடைய புகழ் நிலைக்கும் என்றும் உருக்கம் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் உருக்கம்: தமிழ் சினிமாவின் பீஷ்மர் என்றும் பேற்றப்படும் கே பாலசந்தர் தேசிய விருது, மாநில விருது, பத்மஸ்ரீ, அண்ணா விருது, கலைஞர் விருது, கலைமாமணி என பல விருதுகளுக்கு சொந்தக்காரர். சிவாஜியை வைத்து எதிரொலி என்ற படத்தை இயக்கியுள்ள கே பாலசந்தர், எம்ஜிஆரின் தெய்வத்தாய் படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். மற்றபடி தன்னுடைய ஹீரோக்களை இவரே உருவாக்கியதுதான் வரலாறு. தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் இவர் படங்களை இயக்கியுள்ளார். தொடர்ந்து கையளவு மனசு உள்ளிட்ட ரசிகர்களின் எவர்கிரீன் பேவரைட் சீரியல்களையும் கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











