twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சென்னையில் ஒரு சாலைக்கு நடிகர் நாகேஷின் பெயரைச் சூட்ட வேண்டும்... நடிகர் கமல்ஹாசன் கோரிக்கை!

    |

    சென்னை: சென்னையில் ஒரு சாலைக்கு நடிகர் நாகேஷின் பெயரை சூட்ட வேண்டும் என்றும் அவரது பெயரில் அரசு விருதை அறிவிக்க வேண்டும் என நடிகர் கமல் ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    தமிழ் சினிமிவில் தலைச்சிறந்த நடிகராக வலம் வந்தவர் நடிகர் நாகேஷ். நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் மற்றும் வில்லன் நடிகராகவும் முத்திரை பதித்தவர் நாகேஷ்.

    கையில் மது பாட்டிலுடன் ஆட்டம் போட்ட… பிரபல தொகுப்பாளினி!கையில் மது பாட்டிலுடன் ஆட்டம் போட்ட… பிரபல தொகுப்பாளினி!

    நடிகர் நாகேஷ் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நாகேஷின் நடிப்பு பிரபல ஹாலிவுட் நடிகர் ஜெர்ரி லெவிஸை நினைவுப்படுத்தும் வகையில் இருக்கும்.

    பாலச்சந்தருக்கு பிடித்த நடிகர்

    பாலச்சந்தருக்கு பிடித்த நடிகர்

    இதனால் இந்தியாவின் ஜெர்ரி லெவிஸ் என அழைக்கப்பட்டு வந்தார். பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் நாகேஷ். அந்தக் கால நட்சத்திர நடிகர்களான சிவாஜி கணேசன், எம்ஜிஆருடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். இயக்குநர் பாலச்சந்தருக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர் நாகேஷ்.

    நாகேஷ் மாதிரி நடிப்பது கடினம்

    நாகேஷ் மாதிரி நடிப்பது கடினம்

    கமல் உட்பட தான் இயக்கிய படங்களில் நடித்த பல நடிகர்களை நாகேஷை பார்த்து நடிக்க கற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார் இதனை கமலே பல முறை நினைவு கூர்ந்துள்ளார். நடிகர் கமல் ஹாசன், பாலச்சந்தருக்கு பிறகு அதிகம் மதித்த நபர்களில் சிவாஜி, நாகேஷுக்கு பெரும் இடம் உண்டு. மேலும் நாகேஷ் மாதிரி நடிப்பது கடினம் என பலமுறை சொல்லியிருக்கிறார் கமல்.

    நாகேஷுக்காக கமல் கோரிக்கை

    நாகேஷுக்காக கமல் கோரிக்கை

    மேலும் நடிகர் நாகேஷ் பிணமாக நடித்ததை பாராட்டியும் இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். நாகேஷ் இறந்தபோது இதனை குறிப்பிட்டு இப்போதுக்கூட அப்படி நடிக்கிறாரோ என்று ஐயமாக உள்ளது என்று பேசினார் கமல். இந்நிலையில் சென்னையில் ஒரு சாலைக்கு நடிகர் நாகேஷின் பெயரை வைக்க வேண்டும் என்றும் அவரது பெயரில் விருது அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார் கமல்.

    தமிழகத்தின் சார்லி சாப்ளின்

    தமிழகத்தின் சார்லி சாப்ளின்

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, நகைச்சுவை நடிப்பில் தனக்கென தனி முத்திரையைப் பதித்த நாகேஷ் இந்திய சினிமாவின் இணையற்ற நடிகர்களுள் ஒருவர். 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்து தமிழர்களை மகிழ்வித்தவர். இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ், தமிழகத்தின் சார்லி சாப்ளின் என்றெல்லாம் அவரது நடிப்பு ஊடகங்களால் புகழப்பட்டது.

    நாகேஷின் இயல்பல்ல

    நாகேஷின் இயல்பல்ல

    1958-ல் மனமுள்ள மறுதாரத்தில் அறிமுகமாகி 2008-ல் தசாவதாரம் வரை மிகச்சரியாக அரை நூற்றாண்டுகள் நீடித்தது அவரது கலைப்பயணம். எங்கும் எப்போதும் தன்னை முன்னிறுத்திக்கொள்வதோ, விருதுகள் அங்கீகாரங்களுக்கோ ஆள் பிடிப்பதோ நாகேஷின் இயல்பல்ல. அதன் பொருட்டே வாழும் போதும் வாழ்ந்த பிறகும் புறக்கணிக்கப்பட்ட மகா கலைஞன் அவர்.

    Recommended Video

    Bigg Boss 5 Tamil Final Contestant List? | Kamal Hassan
    சினிமாவின் எந்த உயரிய விருதுக்கும்

    சினிமாவின் எந்த உயரிய விருதுக்கும்

    1974-ல் தமிழக அரசு அளித்த கலைமாமணி விருது, 1994-ல் நம்மவர் திரைப்படத்திற்காக மத்திய, மாநில அரசுகளின் சிறந்த துணை நடிகர் விருது ஆகியவைதான் அவரது கலைவாழ்வில் கிடைத்த சிறு அங்கீகாரங்கள். என்னைப் பொருத்தவரையில் சினிமாவின் எந்த உயரிய விருதுக்கும் தகுதியானவர் நாகேஷ். இவர் பிரான்ஸிலோ, அமெரிக்காவிலோ, ஜெர்மனியிலோ பிறந்திருந்தால் இவர் பெற்றிருந்திருக்கக் கூடிய கவுரவம் என்னவாக இருந்திருக்கும் என்பதை யூகித்துப் பார்க்கிறேன்.

    குறைந்த பட்ச அங்கீகாரங்களாக அமையும்

    குறைந்த பட்ச அங்கீகாரங்களாக அமையும்

    அவர் மறைந்து 12 ஆண்டுகள் ஆன பிறகும் கூட அவர் மீதான அரசின் புறக்கணிப்பு தொடர்வது ஒரு சககலைஞனாக எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

    இந்த மகத்தான நடிகரின் கலைப்பங்களிப்பினை அங்கீகரிக்கும் வகையில் சென்னையில் ஒரு சாலைக்கு அவரது பெயரைச் சூட்டுவதும், அவரது பெயரில் ஒரு விருதினைத் தோற்றுவிப்பதும், எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்திற்குள் அவரது சிலையை அமைப்பதும் குறைந்த பட்ச அங்கீகாரங்களாக அமையும்.

    கமல்ஹாசன் தமிழக அரசுக்கு கோரிக்கை

    கமல்ஹாசன் தமிழக அரசுக்கு கோரிக்கை

    கலைஞர்களைப் போற்றுவதும் நல்லரசின் கடமை என்பதை உணர்ந்து தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    English summary
    Actor Kamal has demanded Tamil Nadu govt that a road in Chennai should be named after actor Nagesh and an award should be announced in his name. Kamal has released Statement for late actor Nagesh.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X