Kamal haasan: விக்ரம் 2 இல்லையா.. படிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய கமல்ஹாசன் அதிரடி!

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் நடிப்பு, தயாரிப்பில் வெளியான விக்ரம் படம் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படம் கமலுக்கு மட்டுமில்லாமல் படத்தின் ஒவ்வொரு நடிகர், நடிகைக்கும் மிகப்பெரிய வரவேற்பையும் அடுத்தடுத்த வாய்ப்புகளையும் பெற்றுக் கொடுத்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அந்த படம் கைவிடப்பட்ட நிலையில் அடுத்ததாக இயக்குநர்கள் அன்பறிவு டைரக்ஷனில் கமல்ஹாசன் இணையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது-இதனிடையே மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் படம் வரும் ஜூன் மாதம் ரிலீசாகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

kamal haasan thug life movie ai technology


நடிகர் கமல்ஹாசன்: நடிகர் கமல்ஹாசனின் அடுத்தடுத்த படங்கள் மிகச்சிறப்பாக திட்டமிடப்பட்டு வருகின்றன. அவரது விக்ரம் படத்தை தொடர்ந்து அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அவர் கேங்ஸ்டராக நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவரது வளர்ப்பு மகனாக சிம்புவும் அவருக்கு ஜோடியாக திரிஷாவும் படத்தில் இணைந்துள்ளனர். மேலும் அபிராமி, நாசர், வையாபுரி உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் இந்த படத்தில் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். மணிரத்னம் -கமல்ஹாசன் கூட்டணி நாயகன் படத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னதாக மிகப்பெரிய அளவில் வெற்றி கொடுத்த நிலையில் அவர்களின் காம்பினேஷன் மீண்டும் நிகழ்வதற்கு இத்தனை ஆண்டு காலம் ரசிகர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

தக் லைஃப் ரிலீஸ்: இந்நிலையில் தக் லைஃப் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை என்டர்டெயின் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் சூட்டிங், டப்பிங் உள்ளிட்ட பல வேலைகளை நிறைவு செய்துவிட்டு கமல்ஹாசன் அமெரிக்கா சென்று விட்டார். அங்கு ஏஐ தொழில்நுட்பத்தை படிப்பதற்காக அவர் சென்ற நிலையில் இந்த வயதிலும் அவரின் கற்கும் ஆர்வம் இளைஞர்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தை கொடுத்தது. இந்நிலையில் நேற்றைய தினம் அவர் அமெரிக்காவில் தன்னுடைய படிப்பை நிறைவு செய்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார்.

விக்ரம் 2 பட அப்டேட்: சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மணிரத்னம் இயக்கத்தில் தான் நடித்துள்ள தக் லைஃப் படம் வரும் ஜூன் மாதம் 5ம் தேதி ரிலீசாகவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனிடையே அடுத்ததாக விக்ரம் 2 படத்தின் ஷூட்டிங்கில் அவர் பங்கேற்பாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், இல்லை என்றும் அந்த படத்திற்காக இல்லாமல் தான் மற்றொரு படத்திற்கான திரைக்கதையை உருவாக்கி வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அடுத்ததாக அன்பறிவு இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள நிலையில் அந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை கமல்ஹாசன் மேற்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விரைவில் அடுத்தப்பட சூட்டிங்: தற்போது படிப்பை நிறைவு செய்துவிட்டு கமல்ஹாசன் சென்னை திரும்பியுள்ள நிலையில் அன்பறிவுடனான இந்த படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கலாம். கடந்த ஆண்டில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படம் மிகப்பெரிய சொதப்பலை கொடுத்தது. ஆனால் தயாரிப்பாளராக கடந்த ஆண்டு கமல்ஹாசனுக்கு சிறப்பாக அமைந்தது. அவரது தயாரிப்பில் சிவகார்த்திகேயன் -சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன் படம்மிகப்பெரிய வெற்றியையும் 300 கோடி ரூபாய்களுக்கும் மேலான வசூலையும் குவித்தது. இந்நிலையில் இந்த ஆண்டிலேயே கமல்ஹாசன் நடிப்பில் தக் லைஃப், இந்தியன் 3 படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X