Kamal haasan: வில்லனாக நடிக்க ஒப்புக் கொள்ள இதுதான் காரணம்.. கமல் க்யூட் பேச்சு!
சென்னை: நடிகர்கள் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், கமல்ஹாசன உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் கல்கி.
ப்ராஜெக்ட் கே என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்த இந்தப் படத்திற்கு அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்கி என்று பெயரிடப்பட்டுள்ளது.
கல்கி என்று பெயரிடப்பட்டுள்ளதுடன் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

வில்லனாக நடிக்கும் காரணம் சொன்ன கமல்ஹாசன்: நடிகர் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், திஷா பதானி, பசுபமி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் கல்கி. இந்தப் படத்திற்கு முன்னதாக ப்ராஜெக்ட் கே என்று பெயரிடப்பட்டிருந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்கி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் பிரபாஸ், கமல்ஹாசன், ராணா உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.
நடிகர் அமிதாப் பச்சனும் வீடியோ கால் மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்று கமல்ஹாசனின் நடிப்பு குறித்து பாராட்டு தெரிவித்திருந்தார். நடிகர் கமல்ஹாசனும் படத்தின் ஒவ்வொரு நடிகராக சுட்டிக் காட்டி, தன்னுடைய பாராட்டுக்களை தெரிவிததார். இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன், தான் கல்கி படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டதற்கான காரணம் குறித்து பேசினார். அவரது பேச்சு அனைவரையும் கவரும் வகையில் அமைந்தது.
சினிமாவில் நெகட்டிவ் இல்லாமல் பாசிட்டிவ் கிடையாது. அதனால் சினிமாவில் நெகட்டிவ் கேரக்டர்கள் மிகவும் முக்கியமானது. அதனால்தான் தான் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க கமிட்டானதாக கமல்ஹாசன் தெரிவித்தார். அவரது இந்தப் பேச்சு படக்குழுவினர் மட்டுமில்லாமல் பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்தது. இதனிடையே அமிதாப், ராணா உள்ளிட்டவர்களும் நிகழ்ச்சியில் கமல்ஹாசனுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
பிரபாஸ் லீட் கேரக்டரில் நடித்துவரும் கல்கி படத்தில் கமல்ஹாசன் சில வாரங்களுக்கு முன்பு வில்லனாக கமிட்டானார். முன்னதாகவே இதுகுறித்த தகவல்கள் வெளியான நிலையில், தயாரிப்புத்தரப்பு, இதுகுறித்த அறிவிப்பை மேற்கொண்டு உறுதிப்படுத்தினர். இந்தப் படத்திற்காக கமல்ஹாசனுக்கு 150 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனிடையே நடிகர் கமல்ஹாசன் எவ்வளவு சம்பாதித்தாலும் அவையெல்லாவற்றையும் சினிமாவிலேயே மீண்டும் இன்வெஸ்ட் செய்வார் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்தப் படத்திற்காக சில நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ளார் கமல்ஹாசன். ஆனாலும் படத்தில் அவர் இணைந்துள்ளது, அதிலும் வில்லனாக இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. படம் சர்வதேச அளவில் கவனத்தை பெற இதுவும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. வரும் பொங்கலையொட்டி இந்தப் படம் ரிலீசாகவுள்ளதாக முன்னதாக கூறப்பட்டுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள கிளிம்ப்ஸ், படத்தின் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











