twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முன்னாடி இந்த டைட்டிலைத் தான் வைத்தோம்.. விக்ரம் பட ரகசியத்தை போட்டுடைத்த கமல்!

    |

    சென்னை : நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது விக்ரம் படம்.

    இந்தப் படத்தின் மேக்கிங் தற்போது லோகேஷ் கனகராஜ்க்கு மிகச்சிறந்த பாராட்டை பெற்றுத்தந்துள்ளது.

    அடுத்ததாக அவர் விஜய்யை இயக்கவுள்ள நிலையில், அந்தப் படமும் தன்னுடைய 100 சதவிகித படமாக அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    பிரபல டோலிவுட் ஹீரோவுக்கு ஹீரோயின், வில்லன் ரெடி.. நம்ம தமிழ் நடிகர்கள்தான் நடிக்கிறாங்க! பிரபல டோலிவுட் ஹீரோவுக்கு ஹீரோயின், வில்லன் ரெடி.. நம்ம தமிழ் நடிகர்கள்தான் நடிக்கிறாங்க!

    கமலின் விக்ரம் படம்

    கமலின் விக்ரம் படம்

    உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது விக்ரம் படம். இந்தப் படம் சிறப்பான த்ரில் அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது. படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா உள்ளிட்டவர்களும் நடித்திருந்த நிலையில் அனைவரும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

    நட்சத்திர பட்டாளம்

    நட்சத்திர பட்டாளம்

    மேலும் காயத்ரி, ஷிவானி, மைனா நந்தினி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரப் பட்டாளங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இவர்களை கட்டி மேய்த்து, படத்தை சிறப்பாக உருவாக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். அவரது முந்தைய படங்களான மாநகரம், மாஸ்டர், கைதி படங்களையும் அவர் சிறப்பாக கொடுத்திருந்தார்.

    சமரசமில்லாத படம்

    சமரசமில்லாத படம்

    இந்நிலையில் உலகநாயகனுக்காக எந்தவிதமான சமரசமும் செய்துக் கொள்ளாமல் இவர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் அவரது 100 சதவிகித படமாக வெளியாகியுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக அவர் விஜய்யுடன் இணையவுள்ள தளபதி 67 படமும் இதேபோல தன்னுடைய 100 சதவிகித படமாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    டைட்டில் குறித்த ரகசியம்

    டைட்டில் குறித்த ரகசியம்

    இதனிடையே இந்தப் படத்தின் டைட்டில் குறித்து தற்போது கமல்ஹாசன் மனம் திறந்துள்ளார். முன்னதாக படத்திற்கு ஹிட்லிஸ்ட் என்று பெயர் வைக்கப்பட்டதாகவும் அதன்பின்பே டைட்டிலில் லோகேஷ் மாற்றம் செய்ததாகவும் கமல்ஹாசன் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    80களில் கிடைத்த கரு

    80களில் கிடைத்த கரு

    இந்தப் படத்தின் கருவை தான் கடந்த 1980களின் இறுதியிலேயே யோசித்ததாகவும் ஆனால் படத்தை இயக்க முடியவில்லை என்றும் ஆனால் தற்போது லோகேஷ் கனகராஜ் சிறப்பான திரைக்கதையுடன் படத்தை எடுத்து தற்போது ரிலீஸ் ஆகியுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார். கடந்த 1980களில் கடத்தல் கும்பல் ஒன்றிடம் இருந்து 750 கிலோ போதைப்பொருள் பிடிபட்டதையடுத்தே இந்தக் கதைக்கருவை தான் யோசித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    ரூ.100 கோடியை தாண்டிய விக்ரம் வசூல்

    ரூ.100 கோடியை தாண்டிய விக்ரம் வசூல்

    தற்போது விக்ரம் படம் சர்வதேச பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது. தொடர்ந்து இன்றும் வார இறுதி நாள் என்பதால் வசூல் மேலும் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கமல் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு நடித்துள்ள இந்தப் படம் அவரது வருகையை ஸ்ட்ராங் ஆக்கியுள்ளது.

    English summary
    Kamal haasan revealed old title of Vikram movie
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X