அடுத்தடுத்த க்யூட் புகைப்படங்கள்.. தென்னாப்பிரிக்காவிலிருந்து கமலின் போட்டோஸ்!
சென்னை : நடிகர் கமல்ஹாசன் விக்ரம் கொடுத்த அதிரிபுதிரி வெற்றியை தொடர்ந்து மிகவும் உற்சாகமாக அடுத்தடுத்த பிராஜெக்ட்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.
நடிகராகவும் தயாரிப்பாளராகவும் பல படங்களை கமிட் செய்து வருகிறார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தப்படத்தில் நடிக்கவும் தன்னை தயார்படுத்தியுள்ளார். முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பட்டையை கிளப்பினார்.

தென்னாப்பிரிக்காவில் கமல்ஹாசன் : நடிகர் கமல்ஹாசன் பல ஆண்டுகளாக நடித்து வருபவர். அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று ஆரம்பித்த இவரது திரைப்பயணம் தற்போது நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், அரசியல்வாதி என பல தளங்களில் தொடர்ந்து வருகிறது. பல பரிணாமங்களை இவர் தனது நடிப்பின் மூலம் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். வில்லனாகவும், ஹீரோவாகவும் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாகவும் பலவகைகளில் நடித்து தன்னை மெருகேற்றிக் கொண்டதுடன் ரசிகர்களையும் கட்டிப் போட்டவர் கமல்ஹாசன்.
தொடர்ந்து பல கமர்ஷியல் படங்களையும் கொடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் கமல்ஹாசன். தன்னை இயக்கும் இயக்குநர்களில், கமல்ஹாசனின் தாக்கம் இருக்கும் என்று கூறப்படுவதுண்டு. ஆனால் இந்தக் கட்டுக்களை அவிழ்த்து, சுதந்திரமாக இயக்குநர் லோகேஷ் கனகராஜை செயல்பட வைத்தார் கமல்ஹாசன். இதன் விளைவோ என்னவோ படம் இன்டஸ்ட்ரியல் ஹிட்டாகியுள்ளது. இந்தப் படத்தின் அடுத்த பாகத்திற்கான அறிவிப்பும் செய்யப்பட்டுள்ளது.

விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட இந்தியன் 2 படமும் தற்போது தூசி தட்டப்பட்டு, சூட்டிங் எடுக்கப்பட்டு, இறுதிக்கட்டத்திலும் எட்டியுள்ளது. இந்தப் படங்களை தொடர்ந்து நடிகராகவும், தயாரிப்பாளராகவும் கமல்ஹாசனின் கமிட்மெண்ட்கள் நீளுகிறது. மகேஷ் நாராயணன், பா ரஞ்சித், ஹெச் வினோத், லோகேஷ் கனகராஜ் மற்றும் வெற்றி மாறன் என அடுத்தடுத்த இயக்குநர்களுடன் கமல் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தற்போது தங்கலான் படப்பிடிப்பில் பிசியாக உள்ள இயக்குநர் பா ரஞ்சித், தற்போது கமலுக்காக கதை எழுதிக் கொண்டிருப்பதாகவும், தங்கலான் படத்தை முடித்தபின்பு, இது இறுதி செய்யப்பட்டுவிடும் என்றும் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது இந்தியன் 2 படத்தின் சூட்டிங்கிற்காக வெளிநாடுகளில் உள்ளார் கமல்ஹாசன். தைவானில் இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.

இந்நிலையில் தற்போது தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்ஸ்பர்க்கில் இந்தியன் 2 படக்குழுவினர் உள்ளனர். இங்கு அதிரடியாக ரயில் ஆக்ஷன் காட்சிகள் நடத்தப்படவுள்ளன. 12 நாட்கள் நடைபெறவுள்ள இந்த சூட்டிங்கை முடித்துக் கொண்டு படக்குழுவினர் நாடு திரும்பவுள்ளனர். இந்தப் படத்தின் விக்ரம் படத்தில் இணைந்திருந்த காளிதாஸ் ஜெயராமும் இணைந்துள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்கு முன்பாக தற்போது ரிலாக்ஸ் மோடில் கமல்ஹாசன் காணப்படுகிறார். அவர் இசையமைக்கும் வீடியோவும், ரிலாக்ஸாக இருக்கும் புகைப்படங்களும், விமானத்தில் பறக்கும் புகைப்படங்களும் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன. தென்னாப்பிரிக்காவில் இருந்து வெளியாகியுள்ள கமலின் இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ரசிகர்களை அதிக உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளன.


Click it and Unblock the Notifications











