Don't Miss!
- Technology
ரூ.10,000-க்கு கீழ் அறிமுகமாகும் புதிய மோட்டோ போன்: ஆனாலும் பிரயோஜனம் இல்லை.! ஏன்?
- Finance
அதானி-க்கு செக் வைத்த செபி.. தோண்டி துருவி துவங்கியது.. மொத்தம் 17..!
- Automobiles
தோனி கவாஸாகி பைக், கோலி பிஎம்டபிள்யூ கார்-னு சொன்னாங்களே... எல்லாம் பொய்யா!! குடும்பத்தினர் வெளியிட்ட உண்மை
- News
"கூவாத சேவல்".. கிலியில் எடப்பாடி.. "அவரா" வேட்பாளர்.. 2 சிக்கலும் 3 சாய்ஸூம்.. ஓவர் கன்ஃபியூஷன் போல
- Lifestyle
நீங்க 5,14 மற்றும் 23 ஆம் தேதிகளில் பிறந்தவர்களா? அப்ப உங்களைப் பற்றிய இந்த விஷயங்களை அவசியம் தெரிஞ்சிக்கோங்க!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Sports
"தோனியோட திறமை என்கிட்டையும் இருக்கு".. இந்தியாவுக்கு எதிரான திட்டம்.. மிட்செல் சாண்ட்னர் சவால்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
வயசானாலும் எனர்ஜி குறையாத கமல்.. விக்ரம் படத்தின் ஸ்டண்ட் மேக்கிங் வீடியோ வெளியீடு!
சென்னை : நடிகர் கமல் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகி கடந்த மாதம் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியானது விக்ரம் படம்.
இந்தப் படம் திரையரங்குகளில் ஒரு மாதத்தை கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது.
தற்போது ஓடிடியிலும் இந்தப் படம் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது.
அஜித்
எப்போ
ரிட்டர்ன்...அடுத்து
ஏகே
61
ஷுட்டிங்
நடக்கும்
இடம்
இதுதான்...தீயாய்
பரவும்
போட்டோஸ்

விக்ரம் படம்
நடிகர்கள் கமல், பகத் பாசில், நரேன், சூர்யா, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவான விக்ரம் படம் கடந்த மாதம் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படம் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது.

திரையரங்குகளில் சிறப்பான வெற்றி
படம் திரையரங்குகளில் ஒரு மாதத்தை கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. படத்தின் வசூலும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் படத்தின் வசூல் 450 கோடி ரூபாய்களை எட்டியுள்ளது. இந்நிலையில் தற்போது படம் ஓடிடியிலும் வெளியாகியுள்ளது. இதையடுத்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

பத்தல பத்தல வீடியோ பாடல்
படம் வெளியாகி ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையிலும் படத்திற்கான ப்ரமோஷனை படக்குழு சிறப்பாக செய்து வருகிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் பத்தல பத்தல வீடியோ பாடல் வெளியானது. இந்தப் பாடல் ரிலீசுக்கு முன்னதாக எப்படி வரவேற்பை பெற்றதோ அதேபோல தற்போதும் வரவேற்பை பெற்று வருகிறது.

மேக்கிங் வீடியோ
தொடர்ந்து இரு தினங்களுக்கு முன்பு படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இந்த வீடியோவில் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் ஒவ்வொரு காட்சிக்கும் மேற்கொண்ட மெனக்கெடல்கள் சிறப்பாக வெளிப்பட்டது. இந்த வீடியோவை மற்ற வீடியோக்களை போலவே ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பார்த்தனர்.
Here’s the memorable, #VikramStuntsBTS
— AnbAriv (anbariv) July 9, 2022
Choreographing for #Ulaganayagan ikamalhaasan sir is RARER than RAREST of the experiences. #Vikram for us is pure BLISS. In Dir_Lokesh ‘s style it is LIFETIME SETTLEMENT!!!VijaySethuOffl #FaFa #Mahendran anirudhofficial RKFI pic.twitter.com/rW7erRcNk3
ஸ்டண்ட் மேக்கிங் வீடியோ
இந்நிலையில் தற்போது அடுத்ததாக படத்தின் ஸ்டண்ட் காட்சிகளின் மேக்கிங் வீடியோவும் வெளியாகியுள்ளது. படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர்கள் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். முன்னதாக படத்தின் ரிலீசையடுத்து படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
Recommended Video

கமலின் எனர்ஜி
இந்நிலையில் தற்போது இந்த ஸ்டண்ட் காட்சிகளின் மேக்கிங் வீடியோவும் ஒவ்வொரு காட்சிகளுக்கும் படக்குழு இணைந்து செய்த பிரயத்தனங்களை வெளிப்படுத்தும்வகையில் அமைந்துள்ளது. இந்த வீடியோவில் கமல் தன்னுடைய முழுமையான எனர்ஜியை வெளிப்படுத்தியுள்ளார். படத்தில் நாம் எளிதாக கடந்து செல்லும் ஒவ்வொரு காட்சிகளுக்கும் எவ்வளவு மெனக்கெடல்களை படக்குழு போட்டுள்ளது என்பது இந்த வீடியோ மூலம் வெளிப்பட்டுள்ளது.