Indian 2 :இந்தியன் 2 படத்தோட அடுத்தக்கட்ட சூட்டிங் எங்க தெரியுமா.. தெரிஞ்சா அசந்துடுவீங்க!

சென்னை : நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் இந்தியன் 2. படத்தை பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார்.

விக்ரம் படத்தின் அதிரி புதிரி வெற்றியைத் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்ட இந்தியன் 2 படத்தின் சூட்டிங் தற்போது நடந்து வருகிறது.

படம் அடுத்த ஆண்டு பொங்கலையொட்டி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அடுத்தடுத்து சூட்டிங்கை படக்குழுவினர் முடித்து வருகின்றனர்.

Actor Kamal haasans Indian 2 movie chennai shooting wrapped and the team planned for next schedule

நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் : நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வருகிறது இந்தியன் 2. இந்தப் படத்தின் சூட்டிங் 2018ம் ஆண்டிலேயே துவங்கப்பட்டு சில காரணங்களால் படத்தின் சூட்டிங் இடையில் நிறுத்தப்பட்டது. இதனிடையே ஷங்கர் -லைகா இடையிலும் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. இடையில் ராம்சரணின் தெலுங்குப்படத்தை இயக்க களமிறங்கினார் ஷங்கர்.

இதனிடையே விக்ரம் படத்தின் இன்டஸ்ட்ரியல் ஹிட், கமலை உற்சாகப்படுத்தியுள்ளது. இதையடுத்து லைகா மற்றும் ஷங்கர் இடையிலான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு இந்தியன் 2 படத்தின் சூட்டிங், மீண்டும் கடந்த ஆண்டில் துவங்கப்பட்டு, அடுத்தடுத்த இடங்களில் சூட்டிங் தொடர்ந்து நடத்தப்பட்டது. திருப்பதி, சென்னை, தைவான், ஆப்ரிக்கா உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களாக சென்னையில் இந்தியன் 2 படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்தியன் 2 படத்தின் சென்னை சூட்டிங் நிறைவடைந்துள்ளது. இந்த சூட்டிங்கிற்காக மிகவும் பிரம்மாண்டமான அளவில் செட் போடப்பட்டு சூட்டிங் நடத்தப்பட்டது. சில காட்சிகள் இரவு -பகல் பார்க்காமல் எடுத்து முடிக்கப்பட்டன. படத்தில் சேனாபதி கேரக்டருக்காக, தினந்தோறும் 6 மணி நேரம் மேக்கப் போட்டு கமல் தயாரானார். இதனால் அவரது கேரக்டரை மிகுந்த திட்டமிடலுடன் இயக்குநர் ஷங்கர் தினந்தோறும் எடுத்து முடித்துள்ளார்.

Actor Kamal haasans Indian 2 movie chennai shooting wrapped and the team planned for next schedule

இந்நிலையில் அடுத்ததாக படத்தின் சூட்டிங் லாஸ் ஏஞ்சல்சில் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் சென்னையை போல நீண்ட நாட்கள் இல்லாமல், 10 நாட்கள் மட்டுமே இந்தப் படத்தின் சூட்டிங், லாஸ் ஏஞ்சல்சில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாதத்திலேயே படத்தின் இந்த சூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளதாக படக்குழு தரப்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தை அடுத்த ஆண்டு பொங்கலையொட்டி ரிலீஸ் செய்யவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியன் படம் கொடுத்த சிறப்பான அனுபவத்தை இந்தியன் 2 படமும் கொடுக்கும் என்று படத்தில் நடித்துவரும் ரகுல் பிரீத் சிங் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்தப் படம் மிகவும் சிறப்பாக எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, ராம்சரண் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்கில் ஷங்கர் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X