Indian 2 :இந்தியன் 2 படத்தில் இவர்தான் மெயின் வில்லனா.. அப்ப நல்லாத்தான் இருக்கும்!

சென்னை : நடிகர் கமல்ஹாசன், ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வருகிறது இந்தியன் 2 படம்.

இந்தப் படத்தின் முதல் பாகத்தில் சேனாபதி, சந்த்ரு என இரண்டு கேரக்டர்களில் கமல் நடித்திருந்தார். இந்தப் படம் சூப்பர் ஹிட்டடித்தது.

இந்நிலையில் நீண்ட ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் மீண்டும் ஷங்கர் இயக்கத்திலேயே உருவாகி வருகிறது. இந்தப் படத்திலும் சேனாபதி கேரக்டரில் கமல் நடித்து வருகிறார்.

இந்தியன் 2 படத்தில் மெயின் வில்லனான நடிகர் : நடிகர் கமல்ஹாசன், சுகன்யா, மனிஷா கொய்ராலா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடிக்க கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்தியன் படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் குறித்த எதிர்பார்ப்பு தொடர்ந்து இருந்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டிலேயே இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கியது. தொடர்ந்து சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், சிலபல பிரச்சினைகள் காரணமாக சூட்டிங் நிறுத்தப்பட்டு படம் முடங்கியது.

இந்நிலையில் கடந்த ஆண்டில் இந்தப் படத்தின் சூட்டிங் மீண்டும் துவங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசன் சேனாபதி கேரக்டரில் மீண்டும் நடித்து வருகிறார். ஒவ்வொரு நாளும் அவருக்கு மேக்கப் போட 4 மணிநேரங்கள் நீக்க சில மணிநேரங்கள் ஆகும் நிலையில், சூட்டிங்கை அதற்கேற்ப திட்டமிட்டு ஷங்கர் இயக்கிவருகிறார். இந்நிலையில், இந்தப் படத்தின் சூட்டிங் திருப்பதி, சென்னை, தைவான், ஆப்ரிக்கா என அடுத்தடுத்த இடங்களில் திட்டமிட்டு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

Actor Kamal haasans Indian 2 movie main villain update

இந்தப் படத்தில் ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால், சித்தார்த் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் சூட்டிங் தடைபட்ட நிலையில், ராம்சரணின் கேம் சேஞ்சர் படத்தில் இணைந்த ஷங்கர், தற்போது அந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துள்ளார். இந்நிலையில், தற்போது சென்னையில் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. தொடர்ந்து மீண்டும் வெளிநாட்டில் படத்தின் சூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தில் மெயின் வில்லனாக எஸ்ஜே சூர்யா நடித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் தன்னுடைய போர்ஷனை படத்தில் நிறைவு செய்துள்ள நிலையில், இந்த விஷயத்தை படக்குழுவினர் ரகசியமாக வைத்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் பேட்டியொன்றில் பேசிய எஸ்ஜே சூர்யா, தான் மிகப்பெரிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளதாக தகவல் தெரிவித்தார். இந்தப் படம் குறித்துதான் அவர் அந்த பேட்டியில் பேசியிருந்தது தற்போது வெளியாகியுள்ளது.

தொடர்ந்து கேரக்டர் ரோல்கள், ஹீரோ கேரக்டர்கள், வில்லன் என அதிரடி சரவெடியாக காணப்படுகிறார் எஸ்ஜே சூர்யா, விஜய், சிவகார்த்திகேயன் என பாரபட்சமின்றி அவர் வில்லனாக மிரட்டியுள்ளார். இந்நிலையில் தற்போது கமல்ஹாசனுக்கும் அவர் வில்லனாகியுள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காம்பினேஷன் ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X