பிரம்மாண்ட ஆக்ஷன் காட்சிகள்.. இந்தியன் 2 படத்தில் இத்தனை வில்லன்களா?

சென்னை : நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வருகிறது இந்தியன் 2 படம்.

இயக்குநர் ஷங்கர் டைரக்ஷனில் உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது பனையூரில் நடைபெற்று வருகிறது.

படத்தின் பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகளை தற்போது படக்குழுவினர் படமாக்கி வருகின்றனர்.

கமலின் இந்தியன் 2 படம்

கமலின் இந்தியன் 2 படம்

நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வருகிறது இந்தியன் 2 படம். இந்தப் படத்தின் சூட்டிங், சென்னை, திருப்பதி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. படத்தில் சேனாபதியாக கமலின் கெட்டப்புகள் மிரட்டலான போஸ்டர்களாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

இந்தியன் படம்

இந்தியன் படம்

இந்தியன் படத்தில் சேனாபதி மற்றும் சந்த்ரு கேரக்டர்களில் நடித்திருந்தார் கமல்ஹாசன். அவருடன் சுகன்யா, மனிஷா கொய்ராலா உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். மிரட்டலான கான்செப்ட்டுடன் ரசிகர்களை இந்தப் படம் கவர்ந்தது. இந்தப் படத்திலேயே இரண்டாவது பாகத்திற்கான லீட் கொடுக்கப்பட்டிருந்தது.

மீண்டும் சூட்டிங்

மீண்டும் சூட்டிங்

இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கி நடைபெற்ற நிலையில், சூட்டிங்கின்போது நடைபெற்ற விபத்து காரணமாக படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்தப் படம் மீண்டும் தூசி தட்டப்பட்டு விறுவிறுப்பான படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

ராம்சரணின் படம் மற்றும் கமலின் இந்தியன் 2 என பிசியாக அடுத்தடுத்து சூட்டிங்கை நடத்தி வருகிறார் இயக்குநர் ஷங்கர். இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்டவர்கள் இணைந்துள்ள நிலையில், அவ்வப்போது சூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழுவினர் பகிர்ந்து வருகின்றனர்.

 பனையூரில் சூட்டிங்

பனையூரில் சூட்டிங்

இந்நிலையில் தற்போது படத்தின் சூட்டிங் பனையூரில் நடைபெற்று வருகிறது. ஒரு வாரத்திற்கு இரவு நேரத்தில் படத்தின் சூட்டிங் இங்கு நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் இதற்காக தமிழ் மற்றும் பிரிட்டிஷ் ஸ்டண்ட் கலைஞர்கள் சூட்டிங்கில் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

கமலுக்கு 7 வில்லன்கள்

கமலுக்கு 7 வில்லன்கள்

படத்தில் முன்னதாக இணைந்திருந்த விவேக்கின் காட்சிகள் தற்போது மீண்டும் எடுக்கப்பட உள்ளன. இந்நிலையில் படத்தில் கமலுக்கு 7 வில்லன்கள் எனவும் அதில் சமுத்திரக்கனியும் ஒருவர் எனவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளன. படத்தின் ஆக்ஷன் காட்சிகள் வேறு லெவலில் ரசிகர்களை மிரட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X