வாகையை சூடிய விக்ரம்.. 75வது நாள் கொண்டாட்டம்.. மிரட்டலான மேக்கிங் வீடியோ இதோ!
சென்னை : நடிகர் கமல்ஹாசன் எப்போதுமே மக்களின் நாடித்துடிப்பை எகிற செய்யும் படங்களில் நடித்து சிறப்பு பெற்றவர்.
Recommended Video
4 ஆண்டு இடைவெளிக்கு பின்பு இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியானது விக்ரம் படம். இந்தப் படம் தற்போது 75 நாட்களை திரையரங்குகளில் கடந்துள்ளது.
படத்தின் வசூலும் 500 கோடிகளை நெருங்கியுள்ளது. தற்போதும் இந்தப் படத்திற்கு திரையரங்குகளிலும் ஓடிடி தளத்திலும் சிறப்பான வரவேற்பு காணப்படுகிறது.

கமலின் விக்ரம் படம்
நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் இரு மாதங்களுக்கு முன்பு வெளியானது விக்ரம். இந்தப் படம் சிறப்பான பிரமோஷன்கள் மற்றும் அது ஏற்படுத்திய எதிர்பார்ப்புடன் வெளியானது. அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தியும் செய்தது. விளைவு அதிரி புதிரி வெற்றிதான்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
இந்தப் படத்தை இயக்கியிருந்தார் லோகேஷ் கனகராஜ். அவருடைய 4வது படமாக விக்ரம் வெளியான நிலையில் முன்னதாக எந்தவிதமான இயக்கத்திற்கான அனுபவமும் இல்லாமல் இப்படி ஒரு திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளுடன் எப்படி ஒரு படம் கொடுக்க முடியும் என்பதற்கான எந்த பதிலும் லோகேஷிடம் இல்லை. அவரிடம் காணப்படுவது எல்லாமே அடுத்தடுத்த படங்களை சிறப்பாக கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டுமே.

தளபதி 67 படம்
அடுத்ததாக அவர் தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் அக்டோபரில் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய் இந்தப் படத்தின்மூலம் கேங்ஸ்டராக களமிறங்குகிறார். விரைவில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகும என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து கைதி 2வை லோகேஷ் இயக்கவுள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

75 நாட்கள் நிறைவு
இதனிடையே விக்ரம் படம் ரிலீசாகி தற்போது 75 நாட்களை திரையரங்குகளில் கடந்துள்ளது. இதையொட்டி ரசிகர்களும் படக்குழுவினரும் சிறப்பான கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொண்டாட்டத்தை குறிக்கும் வகையில் விக்ரம் படத்தின் மிரட்டலான மேக்கிங் காட்சிகள் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

விக்ரம் மேக்கிங் வீடியோ
இந்த மேக்கிங்கும் புதிதான அனுபவத்தையே கொடுத்துள்ளது. இந்தப் படம் அடுத்தடுத்து பார்த்தாலும் வித்தியாசமான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. குறிப்பாக இந்தப் படத்தில் இணைக்கப்பட்டுள்ள லோகேஷ் யுனிவர்ஸ் சிறப்பாக பார்க்கப்படுகிறது. இதில் விஜய்யும் தளபதி 67 படத்தின்மூலம் இணைவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமல் உற்சாகம்
கமலுக்கு அவரது கேரியரில் இல்லாத வகையில் மிகவும் சிறப்பாக வசூல் ரீதியாக கைக்கொடுத்துள்ளது விக்ரம். இந்தப் படம் திரையரங்குகளில் 500 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளது. இதையடுத்து கமல் உற்சாகமாக தனது அடுத்தடுத்த படங்களின் அறிவிப்பை வெளியிட்டு வருகிறார். சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்களை கொண்டு பட அறிவிப்புகளை செய்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











