சால்ட் அண்ட் பெப்பர் லுக்..முறுக்கு மீசை..இந்தியன் 2 படத்திற்கு ரெடியான கமல்ஹாசன்!
சென்னை : இந்தியன் 2 படத்திற்காக நடிகர் கமல்ஹாசன் புது கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் பிளாக் பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, உலக நாயகன் கமல்ஹாசன் தனது அடுத்த படமான இந்தியன் 2 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.
ஷங்கர் இயக்கும் இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங் , பிரியா பவானி சங்கர் , சமுத்திரக்கனி , பாபி சிம்ஹா ,குரு சோமசுந்தரம் , டெல்லி கணேஷ் , ஜெயபிரகாஷ் , வெண்ணிலா கிஷோர் உள்ளிட்டோர் லீட் ரோலில் நடித்து வருகின்றனர்.

இந்தியன்
1996ம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற்றது. லஞ்சம் வாங்கும் ஊழல் பெருச்சாளிகளுக்கு கொலை மிரட்டல் விடும் சுதந்திரப் போராட்ட வீரரின் கதை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. முதல் பாகத்தின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

படப்பிடிப்பு நிறுத்தம்
விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் 2020ம் ஆண்டு கிரேன் சரிந்து விழந்து விபத்தால் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதை அடுத்து கொரோனா ஊரடங்கு, தயாரிப்பு நிறுவனத்துடன் பிரச்சனை என பல ஆண்டுகள் இந்தியன்2 ஷூட்டிங் நடத்த முடியாமல் போனது. இதையடுத்து, ரெட் ஜெயண்ட் உதவியோடு அனைத்து பிரச்சனைகளும் சரிசெய்யப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியது.

சால்ட் அண்ட் பெப்பர் லுக்
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பாரிஸ் கார்னரில் உள்ள எழிலகம் கட்டிடத்தில் சமீபத்தில் தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது. தற்போது இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்தியன் 2 படத்திற்காக நடிகர் கமல்ஹாசன் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் முறுக்கு மீசையுடன் புதிய கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் வெளியாக உள்ளது. கமலின் ரசிகர்கள் இந்த போட்டோவை டிரெண்டாக்கி வருகின்றனர்.

சங்கர் பிஸி
இயக்குனர் சங்கர் ராம்சரனின் 15வது படத்தில் பிசியாக இருப்பதால், கமலஹாசனின் காட்சிகள் தவிர மற்ற காட்சிகளை இயக்க சங்கரின் உதவி இயக்குனர்களாக இருந்து தற்போது பிரபல இயக்குனர்களாக மாறியுள்ள வசந்த பாலன், அறிவழகன், சிம்பு தேவன் ஆகியோரை சங்கர் களம் இறக்கி உள்ளதாக கூறப்படுகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். விக்ரம் படத்திற்கும் அனிருத் தான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











