Kamal -Pa Ranjith combination: கமலுடன் இணையும் பா ரஞ்சித்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

சென்னை: நடிகர் கமல்ஹாசன் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தயாரிப்பாளராகவும் நடிகராகவும் அடுத்தடுத்து மாஸ் காட்டி வருகிறார். கமல் -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான விக்ரம் படம் இன்டஸ்ட்ரியல் ஹிட்டடித்த நிலையில், அடுத்தடுத்த படங்களில் உற்சாகமாக கமிட்டாகி நடித்து வருகிறார். ஒருபுறம் சிவகார்த்திகேயனின் SK21 மற்றும் சிம்புவின் STR48 படங்களை அடுத்தடுத்து தயாரித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயனின் SK21 படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ளது. STR48 படத்தின் சூட்டிங் இம்மாதம் துவங்கவுள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்களை மிரட்டியுள்ளது.

நடிகராகவும் அடுததடுத்த படங்களில் கமிட்டாகி நடித்துவருகிறார் கமல்ஹாசன். ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்களில் நடித்துள்ள கமல்ஹாசன், பிரபாசுடன் இணைந்து கல்கி 2898 AD படத்திலும் அவருக்கு வில்லனாக நடித்துள்ளார். அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் KH233 படத்தில் அவர் இணையவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்தப் படம் கைவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்ததாக இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தன்னுடைய KH234 படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார். தொடர்ந்து அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக வெளிநாடு செல்லவுள்ளார்.

Actor Kamal haasan seems to be join with Director Pa Ranjith in his KH233

நடிகர் கமல்ஹாசன்: நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி மாஸ் காட்டி வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படம் மல்ட்டி ஸ்டாரர் படமாக வெளியாகி சிறப்பான வரவேற்பையும் வசூலையும் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்களில் நடித்து முடித்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படங்கள் இந்த ஆண்டிலேயே அடுத்தடுத்து வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து பிரபாசின் வில்லனாக கல்கி 2898 AD படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

டிராப்பான KH233 படம்: இந்தப் படங்களை தொடர்ந்து அறிவிப்பு வெளியாகி அதிக காலங்கள் ஆன ஹெச் வினோத்தின் KH233 படத்தின் சூட்டிங்கில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அந்தப் படம் டிராப் ஆகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து மணிரத்னத்துடன் தன்னுடைய KH234 படமான தக் லைஃப் படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார். இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங்கில் கமல்ஹாசன், ஜோஜூ ஜார்ஜ் போன்றவர்கள் இணைந்திருந்தனர். இந்நிலையில் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் சைபீரியா, உள்ளிட்ட நாடுகளில் நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தக் லைஃப் படம்: படத்தில் கமல்ஹாசனுடன் திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம்ரவி, கௌதம் கார்த்திக் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர். இதனிடையே கமலின் அடுத்தப்படம் குறித்த தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. அடுத்ததாக இயக்குநர் பா ரஞ்சின் இயக்கத்தில் கமல்ஹாசன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமே தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கேங்ஸ்டர் மற்றும் அரசியலை கதைக்களமாக கொண்டு மதுரையை சார்ந்து இந்தப் படம் உருவாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பா ரஞ்சித்துடன் இணையும் கமல்: தற்போது ஹெச் வினோத்துடனான KH233 படம் டிராப்பாகியுள்ள நிலையில், பா ரஞ்சித்துடனான இந்தப் படம் KH233 படமாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக அட்லீ மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் கமல்ஹாசன் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களையொட்டியும் அவர் பணியாற்றி வருகிறார்.இயக்குநர் பா ரஞ்சித்தும் தங்கலான் படத்தை தொடர்ந்து சார்பட்டா 2, கார்த்தியுடன் ஒரு படம், பாலிவுட்டில் ஒரு படம, சூர்யாவுடன் ஒரு படம் என பிசியாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X