For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  என்னய்யா கோவணத்துடன் நடிச்சிருக்கீங்கன்னு என்னை கேட்டார்கள்.. கமல் சொன்ன சுவாரஸ்ய கதை…

  |

  சென்னை: பிரபு சாலமன் இயக்கியுள்ள செம்பி திரைப்படத்தில் அஷ்வின், கோவை சரளா முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

  இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

  அப்போது கமல்ஹாசன் செம்பி திரைப்படம் குறித்தும், அவர் நடித்த 16 வயதினிலே படம் பற்றியும் சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

   ஹரிஷ் கல்யாண் திருமணம்: தாலி கட்டிய தாராள பிரபு.. மணமேடையிலேயே மனைவிக்கு என்னவொரு கிஸ்! ஹரிஷ் கல்யாண் திருமணம்: தாலி கட்டிய தாராள பிரபு.. மணமேடையிலேயே மனைவிக்கு என்னவொரு கிஸ்!

  செம்பி இசை வெளியீட்டு விழா

  செம்பி இசை வெளியீட்டு விழா

  பிரபு சாலமன் இயக்கத்தில் அஷ்வின், கோவை சரளா நடித்துள்ள திரைப்படம் 'செம்பி.' இதன் மோஷன் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது. கொடைக்கானல் பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், செம்பி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், கமல்ஹாசன் தலைமையில் திரைபிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய அஷ்வின் ஏற்கனவே ஒருமுறை வாய்கொடுத்து ட்ரோல் செய்யப்பட்டதால் கொஞ்சம் தயங்கி தயங்கியே பேசி முடித்தார்.

  செம்பி படம் குறித்து கமல்ஹாசன்

  செம்பி படம் குறித்து கமல்ஹாசன்

  இந்நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், செம்பி படம் குறித்தும், அவரது 16 வயதினிலே படம் பற்றியும் பல விசயங்களை பகிர்ந்துகொண்டார். "கோவை சரளாவை அக்கா, அம்மா என்று கூப்பிடுகிறார்கள், நான் என்ன சொல்வது என தெரியவில்லை. சரளா பாப்பாவை எனக்கு நன்றாக தெரியும். இதில் நன்றாக நடித்துள்ளார். எட்டு வயது பாப்பாவும் தயக்கமில்லாமல் நடித்துள்ளார். பலருக்கு இது வராது. கேமரா ஆன் பண்ணியவுடன் அழுகை சிரிப்பு எதுவும் வராது. என்னையே திட்டியிருக்கிறார்கள்" என கோவை சரளாவை மனம் திறந்து பாராட்டினார். சதிலீலாவதி படத்தில் கமலுக்கு ஜோடியாக கோவை சரளா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  16 வயதினிலே அனுபவம்

  16 வயதினிலே அனுபவம்

  தொடர்ந்து பேசிய நடிகர் கமல்ஹாசன், "நடிப்பு வாய்ப்பு தேடும் காலத்தில் என்னையே பலர் திட்டியுள்ளனர். என்னய்யா இது கோவணம் எல்லாம் கட்டிக்கிட்டு நடிச்சிருக்கீங்கன்னு சொன்னாங்க. ஆனா, இப்போ அந்த நடிப்பை தான் கொண்டாடுகிறார்கள் அதை கேட்க சந்தோஷமாக இருக்கு. ஒரு படம் பெரிய படமா சின்ன படமா என்பது காலம் கடந்து பேசப்படுவதில் தான் இருக்கிறது. இப்போது 16 வயதினிலே படத்தை பெரிதாக பேசுகிறார்கள், அது தான் பெரிய படம். இத்தனை கோடியில் எடுத்தோமே அது என்ன படம் எனக் கேட்டால் அது பெரிய படம் இல்லை என்று தான் கூறுவேன்" என்றார்.

  ரசிகர்கள் பாராட்ட வேண்டும்.

  ரசிகர்கள் பாராட்ட வேண்டும்.

  மேலும், "செம்பி படத்தை கொடைக்கானலில் மிக நல்ல லொகேஷன்களில் எடுத்திருக்கிறார். நான் படம் பார்த்துவிட்டேன். தப்பு நடக்கும்போது நாம் கேள்விக் கேட்க தயங்குவதை இந்தப் படத்தில் தைரியமாக பேசியுள்ளார் பிரபு சாலமன். அதனால், எனக்கு இந்தப் படம் மிகவும் பிடித்துள்ளது. ரசிகர்கள் நல்ல படத்தை பாராட்ட வேண்டும் நல்லாயில்லை என்றாலும் தைரியமாக சொல்ல வேண்டும். அப்போது தான் சினிமா வளரும். நல்ல படத்திற்கு என் ஆதரவு எப்போதும் இருக்கும். பெரும் திறமையாளர்கள் என் கண் முன்னால் வாய்ப்பில்லாமல் அழிந்து போயிருக்கிறார்கள், அதனால் நல்லவற்றை பாராட்ட தயங்காதீர்கள். கற்றுக்கொள்ள தயாராக இருங்கள்" எனக் கூறினார்.

  16 வயதினிலே ப்ளாஷ்பேக்

  16 வயதினிலே ப்ளாஷ்பேக்

  பாரதிராஜா இயக்கத்தில் ரஜினி, கமல், ஸ்ரீதேவி, கவுண்டமணி, காந்திமதி ஆகியோர் நடிப்பில் 1977ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே, தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படங்களில் ஒன்றாகும். ரஜினியின் பரட்டை கேரக்டரும், கமலின் சப்பாணி பாத்திரமும் இனி அவர்களே நினைத்தாலும் மீண்டும் கிடைக்காத தவத்திரு கதாப்பாத்திரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் அதுவரை பார்த்திடாத அசலான கிராம மனிதர்களின் வாழ்வியலை அப்படியே திரையில் காட்டியது. பாரதிராஜா, கே. பாக்யராஜ், கலைமணி பெருமாள் ஆகியோரின் திரைக்கதையோடு, இளையராஜாவின் இசையும் படம் நெடுக உயிர்கொடுத்துக் கொண்டே சென்றது. அற்புதமான பன்முகக் கலைஞனான மலேசியா வாசுதேவன் இந்தப் படத்தில் அறிமுகமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது. செம்பி இசை வெளியீட்டு விழாவில் கமல் பேசியதைப் போல, 16 வயதினிலே படத்தை தவிர்த்துவிட்டு தமிழ் திரையுலகின் பெருமைகளை யாரும் பேசிவிட முடியாது என்பதே உண்மை.

  English summary
  Kamal Haasan attended the music launch of Sembi directed by Prabhu Solomon. Then Kamal shared some interesting memories about the film 16 Vayathinile.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X