Kamal haasan: அமெரிக்காவிலிருந்து கமல் ஸ்டைலிஷ் போட்டோஸ்.. எப்ப சென்னை வறீங்க.. ரசிகர்கள் கேள்வி!
சென்னை: விக்ரம் படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கமல்ஹாசன். மணிரத்னம் கூட்டணியில் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக அன்பறிவ் இயக்கத்தில் இணையவுள்ளார் கமல்ஹாசன்.
தக் லைஃப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு அவர் அமெரிக்காவில் ஏஐ தொழில்நுட்பம் குறித்த படிப்பை படிப்பதற்காக சென்றுள்ளார். முன்னதாக அமரன் படத்தின் சில பிரமோஷன்களில் பங்கேற்ற கமல்ஹாசன், தொடர்ந்து அதன் வெற்றி கொண்டாட்டங்களில் இணைய முடியாத நிலை காணப்பட்டது.

நடிகர் கமல்ஹாசன்: நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம், இந்தியன் 2 படங்களுக்கு பிறகு அடுத்ததாக தக் லைஃப் படம் ரிலீசாகவுள்ளது. இயக்குநர் மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, வையாபுரி, நாசர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். படத்தின் சூட்டிங் நிறைவடைந்து அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக அன்பறிவ் இயக்கத்தில் தன்னுடைய அடுத்த படத்தில் இணையவுள்ளார் கமல்ஹாசன். சமீபத்தில் அவரது ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவன தயாரிப்பாக வெளியானது சிவகார்த்திகேயனின் அமரன் படம்.
தயாரிப்பாளர் கமல்ஹாசன்: இந்தப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து 300 கோடிகளை தாண்டி சர்வதேச அளவில் வசூலித்துள்ளது. படம் ஓடிடியிலும் வெளியாகியுள்ள சூழலில், படம் இந்த ஆண்டின் மிக அதிக அளவில் வசூலித்த படமாக மாறியுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை தயாரிக்கவுள்ள கமல்ஹாசன், நடிகராகவும் அடுத்தடுத்த படங்களில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏஐ தொழில்நுட்பத்தை கற்கும் வகையில் அவர் கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் உள்ளார். இதனால் அவர் அமரன் படத்தின் வெற்றிக் கொண்டாட்டங்களிலும் பங்கேற்க முடியாத நிலை காணப்பட்டது.

அமெரிக்காவில் கமல்: இந்நிலையில் நீண்ட காலங்களுக்கு பிறகு தற்போது அவர் அமெரிக்காவில் இருந்து தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மிகவும் ஸ்டைலிஷ்ஷாக இந்த புகைப்படங்களில் கமல்ஹாசன் காணப்படுகிறார். விரைவில் ஏஐ படிப்பை நிறைவு செய்துவிட்டு அவர் சென்னை திரும்புவார் என்று கூறப்பட்டுள்ளது. செனனை வந்தவுடன் அவர் அன்பறிவ் இயக்கத்தில் இணையவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அவரது தக் லைஃப் படம் சிலமாதங்களில் ரிலீசாகவுள்ள நிலையில் அதன் பிரமோஷன்களிலும் கமல்ஹாசன் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

கமல் -மணிரத்னம் கூட்டணி: கமல்ஹாசனின் விக்ரம் படம் ஹின்டஸ்ட்ரியல் ஹிட்டடித்த நிலையில் அடுத்ததாக நீண்ட காலங்களாக கிடப்பில் கிடந்த இந்தியன் 2 படம் வெளியாகி சொதப்பியது. இந்நிலையில் 34 ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்னத்துடன் கூட்டணி சேர்ந்துள்ளார் கமல்ஹாசன். இந்தப் படத்தில் அவர் கேங்ஸ்டராக நடித்துள்ளதாகவும் அவரது வளர்ப்பு மகனாக சிம்பு நடித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அதை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











