ஷங்கர் பதறிய மாதிரி எனக்கும் பதறுது.. இந்தியன் 2 படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் குறித்து கமல் ஓபன்!

சென்னை: நடிகர்கள் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் இந்தியன் 2. 29 ஆண்டுகளை கடந்து இந்த படம் தற்போது உருவாகி, வரும் ஜூலை மாதம் 12ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தை ஷங்கர் இயக்கியுள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக இந்த படத்தின் ப்ரமோஷன்கள் மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த மாதம் துவக்கத்தில் படத்தின் இசை வெளியீடு நடந்து முடிந்துள்ள நிலையில் நேற்றைய தினம் ட்ரெயிலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் கமல் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்று சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் படம் குறித்து பல்வேறு சுவாரசியங்களை கமல், ஷங்கர், சித்தார்த் உள்ளிட்டவர்கள் பகிர்ந்து கொண்டனர். இதன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

Kamal haasan Indian 2 movie Shankar

இந்தியன் 2 படம்: நடிகர் கமல்ஹாசன். ரகுல் பிரீத் சிங். சித்தார்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தியன் 2 படம் வரும் ஜூலை மாதம் 12ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் ப்ரமோஷன்களை கடந்த சில வாரங்களாகவே படக்குழுவினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த மாத துவக்கத்தில் இந்த படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தி முடிக்கப்பட்டது. முன்னதாக படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் நேற்றைய தினம் இந்த படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

ட்ரெயிலர் வெளியீடு: ட்ரெயிலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர், நடிகர் சித்தார்த் உள்ளிட்ட படக்குழுவினர் இணைந்து தங்களது கருத்துக்களை மற்றும் படம் குறித்த சுவாரசியங்களை பகிர்ந்தனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன், ஷங்கர் உள்ளிட்டவர்களிடம் பத்திரிகையாளர்கள் கேள்விகளை கேட்டனர். அப்போது ஜூலை 12ம் தேதி இந்தியன் 2 படம் வெளியாக உள்ளது, அடுத்ததாக இந்தியன் 3 படம் எப்போது வெளியாகும் என்றும் இந்தியன் 4 மற்றும் இந்தியன் 5 படங்கள் உருவாகி மம்முட்டியின் சாதனையை முறியடிக்குமா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

பதறிய கமல்ஹாசன்: இந்த கேள்விக்கு பதிலளித்த நடிகர் கமல்ஹாசன், இந்த கேள்வியை கேட்கும் போதே தனக்கு பதறுவதாக தெரிவித்துள்ளார். இந்தியன் பட சூட்டிங்கின்போது தான் இந்தியன் 2 படம் குறித்து பேசியபோது ஷங்கர் எப்படி பதறினாரோ, அதுபோல தற்போது இந்த கேள்வியை கேட்கும் போது தனக்கு பதறுவதாக அவர் தெரிவித்துள்ளார். தினந்தோறும் காலை 4 மணிக்கு எழுந்து கோழி கூவுவதை கேட்பது உள்ளிட்ட விஷயங்கள் தன்னுடைய நினைவில் வந்து செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து முதலில் இந்தியன் 2 படம் வெளியாகி, தொடர்ந்து இந்தியன் 3 படமும் ரசிகர்களிடையே வெற்றி பெறட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் பதில்: ரசிகர்களிடையே இந்தப் படங்கள் வரவேற்பை பெற்றவுடன் தங்களுக்கு தெம்பிருந்தால் ரசிகாகளிடம் நம்பிக்கை இருந்தால் அடுத்தடுத்த பாகங்கள் குறித்தும் யோசிக்கலாம் என்று அமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டிலேயே இந்தியன் 2 படத்தின் சூட்டிங் துவங்கப்பட்ட நிலையில், இந்தப் படத்தின் சூட்டிங் பல்வேறு காரணங்களால் முடங்கியது. தொடர்ந்து இந்தப் படம் கமல்ஹாசன் முயற்சியில் மீண்டும் தூசி தட்டப்பட்டு தற்போது ரிலீசுக்கும் தயாராகியுள்ளது. முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், இரண்டாவது படமும் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X