உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு..கமல்ஹாசனின் மாஸ் லுக்.. டிரெண்டாகும் போட்டோஸ்!
சென்னை: விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின், நடிப்பு, தயாரிப்பு என இரண்டிலும் கவனம் செலுத்தி வருவதோடு, அரசியல் களப்பணியிலும் தீவிரம் காட்டி வருகிறார் கமல்ஹாசன். தற்போது இவர் புதிய லுக்கிற்கு மாறி பிளாக் அண்ட் பிளாக்கில் இருக்கும் போட்டோவை இணையத்தில வெளியாகி டிரெண்டாகி உள்ளது.
கமல் ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். ஷங்கரின் இந்தியன் படம் வெளியாகி 28வது ஆண்டுகள் ஆனநிலையில், லஞ்சம், ஊழலுக்கு எதிராக நேர்மையைப் பேசும் கதை இது. இதில் இந்தியன் தாத்தா வீரசேகரன் சேனாபதியாக கமல் நடிப்பில் மிரட்டியிருப்பார். 1996-ம்ஆண்டு வெளியான படத்திற்கு இப்போதும் வரவேற்பு உள்ளது. அதன் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் அவலுடன் எதிர்பார்த்த சூழலில்தான் இந்தியன் 2 உருவானது. இதில் கமல்ஹாசன், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், மறைந்த விவேக், நெடுமுடிவேணு உட்படப் பலர் நடித்துள்ளார்கள்.

இந்தியன் 2: இந்தியன் 2 படத்தில் இந்திய அளவில் பேசப்பட்ட ஊழல்கள், ஆதார் மோசடிகள், அரசியல் சூதுகள் என நடப்பு பிரச்னைகளைப் பேசும் படமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மொத்தமுமே நிறைவடைந்து விட்டது என்றும், அதன் அடுத்த பாகமான 'இந்தியன் 3'யின் வேலைகளில்தான் ஷங்கர் இப்போது இருக்கிறார் என்று கூறப்படுகிறது. மற்றொரு பக்கம் இந்தியன் 2 படத்தின் அனிருத்தின் பின்னணி இசை சேர்ப்பு பணிகளும், எடிட் ஷூட்டில் படத்தொகுப்பு வேலைகளும் மும்முரமாகப் போய்க் கொடு இருப்பதாக சொல்லப்படுகிறது.

தக் லைஃப்: இதைத் தொடர்ந்து, மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தில் கமிட்டாகியுள்ள நடித்து வருகிறார் கமல், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்டபடப்பிடிப்புக்காக செர்பியா சென்ற படக்குழு, ப்ரீ புரொடக்ஷன் வேலைகளை முடித்துவிட்டு கமலுக்காக காத்திருந்தனர். ஆனால், மக்களவைத் தேர்தல் பணி காரணமாக அவர் செர்பியா செல்லவில்லை.
ஒரு ராஜ்யசபா சீட்: திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி இணைந்துள்ளது. அந்த கட்சிக்கு மக்களவை இடங்களுக்கு பதில் ஒரு ராஜ்யசபா சீட்டை திமுக தலைவர் ஸ்டாலின் வழங்கி உள்ளார். இதனால், இந்தமுறை மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் யாரும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும், மாறாக திமுகவுக்கு ஆதரவு கொடுக்க உள்ளதை கமல் அறிவித்துள்ளார்.
உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு: இப்படி சினிமா, அரசியல் என மாறி மாறி படு பிஸியாக இருக்கும் கமல்ஹாசன், தற்போது புதிய லுக்கிற்கு மாறி பிளாக் அண்ட் பிளாக்கில் இருக்கும் போட்டோ இணையத்தில் டிரெண்டாகி உள்ளது. இந்த போட்டோவில் செம ஸ்மார்ட்டாக இன்றைய இளம் ஹீரோக்களுக்கே சவால் விடும் வகையில் இருக்கிறார். இந்த போட்டோவைப் பார்த்த அவரது ரசிகர்கள் உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











