Kamal haasan: தோனியை வைத்து வெற்றிக்கான சீக்ரெட் சொன்ன கமல்ஹாசன்.. த்ரோபேக் வீடியோ!
சென்னை: நடிகர் கமல்ஹாசன் அரசியல், சினிமா என இரு தளத்திலும் சிறப்பாக இயங்கி வருகிறார். தயாரிப்பாளராகவும் நடிகராகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
கடந்த ஆண்டில் கமல் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான விக்ரம் படம் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் கமலுக்கு கைக்கொடுத்தது.
இந்நிலையில் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தோனியின் வெற்றி ரகசியம் குறித்து பேசிய கமல்ஹாசன்: நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் சிறுவயதிலிருந்தே நடித்து வருபவர். இவரது பன்முகத்திறமை உலக நாயகனாக இவரை கொண்டாட வைத்துள்ளது. நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என்ற சினிமாவில் கமல்ஹாசனுக்கு தெரியாத துறையே இல்லை என்று கூறும் அளவில் இவரது செயல்பாடுகள் காணப்படுகின்றன. சினிமாவின் தொழில்நுட்பம் சார்ந்த அறிவையும் அதிகமாக கொண்டுள்ள கமல், தன்னுடைய படங்களில் அத்தகைய கலைஞர்களுக்கு ஆலோசனை கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அரசியலில் அதிகமாக கவனம் செலுத்திவந்த கமல்ஹாசன், நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த ஆண்டில் விக்ரம் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை அவர் தயாரிக்கவும் செய்திருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் இன்டஸ்ட்ரியல் ஹிட்டடித்தது. இந்தப்படம் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. இந்நிலையில் அடுத்தடுத்தப் படங்களில் கமிட்டாகி வருகிறார் கமல்ஹாசன்.
தற்போது இயக்குநர் ஷங்கருடன் இந்தியன் 2 படத்தில் இணைந்துள்ளார் கமல்ஹாசன். இந்தப் படத்தில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த் உள்ளிட்ட நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படம் அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் கமல்ஹாசன். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கப்பட உள்ளது.
மேலும் பிரபாசுடன் ப்ராஜெக்ட் கே படத்திலும் வில்லனாக நடிக்கவுள்ளார் கமல். இந்தப் படத்திற்காக சில நாட்களே அவர் கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில், அவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்தப் படங்களை தொடர்ந்து இயக்குநர் மணிரத்னத்துடன் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார். தயாரிப்பாளராகவும் சிவகார்த்திகேயன், சிம்பு ஆகியோரது படங்களை தயாரிக்கவுள்ளார் கமல்ஹாசன்.
அரசியல், சினிமா என சிறப்பாக செயல்பட்டுவரும் கமல்ஹாசன், சிறந்த மேடைப் பேச்சாளராகவும் இருக்கிறார். தான் வெளிப்படுத்த விரும்பும் ஒரு கருத்தை ரசிகர்களிடம் கடத்துவதில் வல்லவராகவும் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு தன்னுடைய பேச்சு ஒன்றில், தோனியை குறிப்பிட்டு வெற்றிக்கான வழி மற்றும் அழுத்தம் இல்லாமல் எப்படி ஒரு செயலை செய்வது என்பது குறித்து பேசியிருந்தார். தோனி மிஸ்டர் கூலாக இருப்பதற்கு காரணம் குறித்தும் பேசினார்.
தோனி எப்போதும் வெற்றியை பற்றி நினைப்பதில்லை என்றும் சிறப்பாக விளையாடுவது குறித்து மட்டுமே அவரது கவனம் இருக்கும் என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். தோனியின் இந்த மனப்பான்மையை நாமும் பின்பற்றினால் நமக்கு பிரஷர் வராது என்றும் செஞ்சுரிதான் வரும் என்றும் கமல் அந்த பேச்சின்போது தெரிவித்துள்ளார். இதுபோன்ற பல சிறப்பான பேச்சுக்களை தான் பங்கேற்கும் விழாக்களில் பேசி, ரசிகர்களை கவர்ந்துள்ளார் கமல்ஹாசன்.


Click it and Unblock the Notifications











