Thug life movie: தக் லைஃப் படத்திற்காக டப்பிங் வேலைகளை துவங்கிய கமல்ஹாசன்.. அட வீடியோ சூப்பரா இருக்கே!
நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்திற்கு பிறகு நடித்து வரும் படம் தக் லைஃப். மணிரத்னம் இயக்கத்தில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் இணைந்துள்ள தக் லைஃப் படத்தின் சூட்டிங் சென்னை, ஹைதராபாத், பாங்காக் உள்ளிட்ட இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங்கிற்காக கமல்ஹாசன் உள்ளிட்ட படக் குழுவினர் விரைவில் வெளிநாடு செல்ல உள்ளனர். இதனிடையே படத்தின் டப்பிங் வேலைகளும் ஒருபுறம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் டப்பிங் வேலைகளை தான் துவங்கியுள்ளதாக சிம்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

நடிகர் கமல்ஹாசன்: நடிகர் கமல்ஹாசன். சிம்பு. அபிராமி. திரிஷா. வையாபுரி. நாசர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள தக் லைஃப் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவு கட்டத்தை எட்ட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை, பாங்காக் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக கமல்ஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர் வெளிநாடு செல்ல உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகளும் ஒருபுறம் ஜரூராக நடந்து வருகிறது. படம் டிசம்பர் மாதத்தில் கிறிஸ்மஸையொட்டி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தக் லைஃப் படம்: இதையொட்டி இயக்குநர் மணிரத்னம் சிறப்பான திட்டமிடலுடன் இந்த படத்தின் சூட்டிங் மற்றும் டப்பிங் வேலைகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தன்னுடைய டப்பிங் வேலைகளை தக் லைஃப் படத்திற்காக துவங்கியுள்ளதாக நடிகர் சிம்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது நடிகர் கமல்ஹாசனும் இந்த படத்தின் டப்பிங் வேலையை தொடங்கியுள்ளதாக ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வீடியோவுடன் அறிவித்துள்ளது. இந்த வீடியோவில் நடிகர் கமல்ஹாசன் நடந்து செல்வதாகவும் மணிரத்னத்துடன் இணைந்து டிஸ்கஷனில் ஈடுபடுவதாகவும் டப்பிங் பணிகளில் ஈடுபடுவதாகவும் அடுத்தடுத்த காட்சிகள் காணப்படுகின்றன.
டிசம்பர் மாத ரிலீஸ்?: அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் நடிகர் கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக சிம்பு நடித்துள்ளதாக கூறப்படுகிறது. சிம்புவிற்கு ஜோடியாக நடிகை திரிஷா இணைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ள சூழலில் இந்த படம் இந்த ஆண்டிலேயே ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்பட்டுள்ளது கமல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது. முன்னதாக இந்த ஆண்டிலேயே அவரது நடிப்பில் கல்கி 2898 ஏடி மற்றும் இந்தியன் 2 என அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகியுள்ள நிலையில் டிசம்பர் மாதத்தில் தக் லைஃப் படமும் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மணிரத்னம் திட்டம்: இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கிஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்து வருகின்றன. எப்போதும் தான் இயக்கும் படங்களின் சூட்டிங்கை விரைவிலேயே இயக்கி முடிக்கும் பழக்கமுடையவர் மணிரத்னம். வரலாற்று கதைக்களத்தில் பிரம்மாண்டமாக உருவான அவரது பொன்னியின் செல்வன் படத்தின் இரு பாகங்களையும் 155 நாட்களில் அவர் இயக்கி முடித்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல தற்போது தக் லைஃப் படத்தின் சூட்டிங்கையும் அவர் விரைவில் முடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











