Kamal haasan :அதிரடி ஆக்ஷன் ட்ரெயின் காட்சிக்கு முன்னாடி கமல்ஹாசன் செஞ்ச சிறப்பான சம்பவம்!
சென்னை : நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கிவரும் இந்தியன் 2 படத்தின் சூட்டிங் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ளது.
இரண்டு வாரங்கள் தென்னாப்பிரிக்காவில் சூட்டிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதிரடியான ட்ரெயின் சண்டை காட்சிகள் இந்த ஷெட்யூலில் படமாக்கப்பட உள்ளன.
இந்த சூட்டிங்கிற்காக கமல்ஹாசன், ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் தற்போது தென்னாப்பிரிக்காவில் உள்ளனர். முன்னதாக தைவானில் சில தினங்கள் சூட்டிங் நடத்தப்பட்டது.

தென்னாப்பிரிக்காவில் கமல் : நடிகர் கமல்ஹாசன், ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்துவரும் படம் இந்தியன் 2. இந்தப் படம் கடந்த 2018ம் ஆண்டிலேயே அறிவிக்கப்பட்டு, சூட்டிங்கும் நடைபெற்ற நிலையில், சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்து உள்ளிட்ட காரணங்களால் படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டு, தற்போது மீண்டும் துவங்கி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. முன்னதாக சென்னை, திருப்பதி உள்ளிட்ட இடங்களில் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டது.
இதையடுத்து தற்போது வெளிநாடுகளில் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தைவானில் இந்தியன் 2 படத்தின் சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டது. இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து படக்குழுவினர் தென்னாப்பிரிக்கா செல்லும் ஏர்போர்ட் வீடியோவும் வெளியானது. இந்நிலையில் தற்போது தென்னாப்பிரிக்காவில் அதிரடியாக ட்ரெயினில் நடைபெறும் ஆக்ஷன் காட்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

முன்னதாக விக்ரம் படத்தின் அதிரடியான வெற்றியை தொடர்ந்தே இந்தியன் 2 படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டது. இதனிடையே நடிகர் ராம்சரணின் படத்தையும் ஷங்கர் இயக்கி வருகிறார். அதன் சூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படமே ஷங்கர் இயக்கத்தில் முதலில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டின் இறுதியிலே அல்லது அடுத்த ஆண்டின் பொங்கல் ரிலீசாகவோ இந்தியன் 2 வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்தியன் 2 குறித்து அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்கள், படத்திற்கான எதிர்பார்ப்பை மிகவும் அதிகமாக எகிற செய்துள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகின்றனர். இந்தப் படத்தின் முதல் பாகத்தில் இந்தியன் தாத்தாவாக கமல் அதிரடி கிளப்பினார். இந்த லுக்கிற்காக மிகப்பெரிய அளவில் மெனக்கெட்டார். அதே மெனக்கெடலுடன் தான் தற்போதும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். சேனாபதி லுக்கிற்காக அதிகமான மணிநேரங்களை மேக்கப்பிற்காக அவர் செலவழித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் தற்போது இந்தியன் 2 படக்குழுவினர் உள்ளனர். இந்தப் படத்தின் முக்கியமான க்ளைமாக்ஸ் காட்சியாக ட்ரெயின் ஆக்ஷன் காட்சிகள் அமையும் என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே, இந்தக் காட்சிக்கு முன்னதாக தன்னை மனதளவில் சிறப்பாக தயார் படுத்தும்விதமாக கமல்ஹாசன், இசையின்மூலம் பிரேக் எடுத்துள்ளார். அவருடைய கைகள் அந்த இசைக்கருவியில் நர்த்தனம் ஆடுகின்றன. உலகநாயகன் எப்போதுமே எதிலுமே பெஸ்ட்தான் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











