Indian 2 Intro video: சூப்பர்ஸ்டாருடனான அன்பு.. நெகிழ்ச்சி தெரிவித்த உலகநாயகன்!
சென்னை: நடிகர் கமல்ஹாசன் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது இந்தியன் 2 படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளது.
கோடை கொண்டாட்டமாக இந்தியன் 2 படம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் படத்தின் இன்ட்ரோ வீடியோ நேற்றைய தினம் வெளியானது.
இந்த வீடியோவை ரஜினிகாந்த், எஸ்எஸ் ராஜமௌலி, அமீர்கான் உள்ளிட்டவர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

நடிகர் கமல்ஹாசன்: நடிகர் கமல்ஹாசனின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து வருகின்றன. கடந்த ஆண்டில் வெளியான கமல்ஹாசனின் விக்ரம் படம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் குவித்து இன்டஸ்ட்ரியல் ஹிட்டடித்தது. இதையடுத்து அடுத்தடுத்த படங்களில் தன்னை இணைத்து வருகிறார் கமல்ஹாசன். ஷங்கர் இயக்கத்தில் இந்தப் படம் அடுத்தடுத்து இரு பாகங்களாக வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியன் 2 அறிமுக வீடியோ: அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக இந்தியன் 2 படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தியன் 3 படம் தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் அறிமுக வீடியோ நேற்றைய தினம் வெளியானது. இந்த வீடியோவை தமிழில் ரஜினிகாந்தும் தெலுங்கு மற்றும் இந்தியில் ராஜமௌலி, அமீர்கான் ஆகியோரும் வெளியிட்டனர். இதேபோல மலையாளத்தில் மோகன்லாலும் கன்னடத்தில் கிச்சா சுதீப்பும் இந்த அறிமுக வீடியோவை வெளியிட்டனர்.
கமல்ஹாசன் நன்றி: இந்நிலையில் இவர்கள் அனைவருக்கும் தனித்தனியாக நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார். குறிப்பாக நடிகர் ரஜினிகாந்திற்கு தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ள கமல்ஹாசன், அவரது அன்பிற்கு நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். முன்னதாக ரஜினி உள்ளிட்டவர்கள் இந்த அறிமுக வீடியோவை வெளியிடவுள்ளதாக லைகா அறிவித்திருந்தது. மேலும் அவர்களின் சிறுவயது புகைப்படங்களையும் இணைத்திருந்தது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை தூண்டியது.
சூட்டிங் நிறைவு: கடந்த 2017ம் ஆண்டிலேயே இந்தியன் 2 படத்தின் சூட்டிங் துவங்கப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் இந்தப் படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் விக்ரம் படம் கொடுத்த உற்சாகத்துடன் இந்தப் படத்தின் சூட்டிங்கை கடந்த ஆண்டில் துவங்க முயற்சிகள் மேற்கொண்டார் கமல்ஹாசன். இதையடுத்து படத்தின் சூட்டிங் மீண்டும் தூசி தட்டப்பட்டு தற்போது சூட்டிங் நிறைவடைந்துள்ளது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
ரசிகர்களை கவர்ந்த அறிமுக வீடியோ: படத்தின் சிஜி வேலைகள் தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தின் சூட்டிங் சென்னை, திருப்பதி, தைவான், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டுள்ளன. இதனிடையே இந்த இன்ட்ரோ வீடியோவில் எஸ்ஜே சூர்யா, சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், மறைந்த மனோபாலா, விவேக் ஆகியோர் இடம்பெற்றுள்ளது ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











