Vijay Leo: கடைசியில் அது நடக்கவே போகுது.. விஜயின் லியோ படத்தில் இணையும் கமல்ஹாசன்? ஷூட்டிங் எப்போ?

சென்னை: நடிகர் விஜய் நடிக்கும் லியோ பட ஷூட்டிங் சென்னையில் தொடங்க உள்ளது. நடிகர் விஜயுடன் கமல் ஹாசன் நடிக்கும் சில காட்சிகள் படமாக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் விஜய் நடிக்கும் லியோ பட ஷூட்டிங் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடந்து கொண்டு இருந்தது. அங்கே ஷூட்டிங் முடிந்துவிட்டது.

இதையடுத்து சென்னைக்கு விஜய் - திரிஷா திரும்பி வந்துள்ளனர். சென்னையில் படத்தின் ஷூட்டிங் விரைவில் நடக்க உள்ளது. அங்கே இதற்காக செட் போடும் பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன.

காஷ்மீர்

காஷ்மீர்

காஷ்மீரில் சண்டை காட்சிகள் சில இருந்தன. அந்த காட்சிகள் எல்லாம் நிறைவு அடைந்து உள்ளன. அதேபோல் சில ரொமான்ஸ் காட்சிகள், சேசிங் காட்சிகளும் இருந்துள்ளன. அந்த ஷூட்டிங் எல்லாம் மொத்தமாக முடிந்துள்ளன. இதையடுத்து சென்னையில் விறுவிறுப்பாக ஷூட்டிங் நடக்க உள்ளது. சென்னையில் பெரும்பாலும் சண்டை காட்சிகள், சேசிங் காட்சிகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் ஹைதராபாத்தில் ஷூட்டிங் நடக்க உள்ளது.

கிளைமேக்ஸ்

கிளைமேக்ஸ்

ஹைதராபாத்தில் ஒரு சில காட்சிகள் மட்டும் பிலிம் சிட்டியில் எடுக்கப்படும். அதன்பின் மீண்டும் சென்னையில் கிளைமேக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட உள்ளன. இந்த கிளைமேக்ஸ் காட்சிகளுக்கு முன்பாக நடிகர் விஜயுடன் கமல் ஹாசன் நடிக்கும் சில காட்சிகள் படமாக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா நடிக்கிறார். அதேபோல் சஞ்சய் தத் இந்த படத்தில் வில்லன் பாத்திரத்தில் நடிக்கிறார் . இது போக மிஸ்கின் இன்னொரு வில்லனாக நடிக்கிறார். மேலும் அர்ஜுன், கவுதம் மேனன் ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

சென்னை

சென்னை

இதையடுத்து சென்னை ஷூட்டிங்கில் கமல் ஹாசன் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தில் பகத் பாசில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. பகத் பாசிலும் இதற்கு மழுப்பலாக பதில் அளித்து இருந்தார். அதேபோல் நரேன் சின் ரோலில் கிளைமேக்சில் வருவார் என்றும் கூறப்படுகிறது. இதை வைத்து பார்க்கையில் இந்த படம் கண்டிப்பாக லோகேஷ் கனகராஜின் எல்சியு யுனிவர்சை சேர்ந்த படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

யுனிவர்ஸ்

யுனிவர்ஸ்

நடக்கும் விஷயங்களை பார்க்கும் போது லியோ லோகேஷ் கனகராஜின் எல்சியு யுனிவர்சை சேர்ந்த படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் கைதி படம் எடுத்து இருந்தார். அதன்பின் விக்ரம் படம் அதே யுனிவர்சில் வந்தது. கைது படம் முடிந்ததில் இருந்து விக்ரம் படம் தொடங்கியது. பெரும்பாலும் விக்ரம் படம் தொடங்குவதற்கு முன் உள்ள கதையை லியோ படத்தில் வைத்து இருப்பார்கள். அல்லது கைதி படத்திற்கு முன் உள்ள கதையை லியோ படத்தில் வைத்து இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பகத் பாசில் வேறு வருவதால் இந்த கதை கண்டிப்பாக மிகப்பெரிய அளவில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடந்து கொண்டு இருந்தது. அங்கே ஷூட்டிங் முடிந்துவிட்டது. இதையடுத்து சென்னைக்கு விஜய் - திரிஷா திரும்பி வந்துள்ளனர். விரைவில் சென்னை ஷூட்டிங் தொடங்க உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X