Kamal haasan: பதின்பருவ நண்பர்.. ஜூனியர் பாலையா மறைவுக்கு அஞ்சலி தெரிவித்த கமல்ஹாசன்!
சென்னை: பழம்பெரும் நடிகர் டிஎஸ் பாலையாவின் மகன் ஜூனியர் பாலையா உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக இன்றைய தினம் மரணமடைந்துள்ளார்.
ரகு என்ற தன்னுடைய இயற்பெயரை சினிமாவிற்காக ஜூனியர் பாலையா என மாற்றிக் கொண்ட இவர், கோபுர வாசலிலே, கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சித்தி, சின்ன பாப்பா பெரிய பாப்பா உள்ளிட்ட சீரியல்களிலும் இவர் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளார்.
நடிகர் ஜூனியர் பாலையா: பழம்பெரும் நடிகர் டிஎஸ் பாலையாவின் மகனான ஜூனியர் பாலையா திரைப்படங்கள், சீரியல்கள் என பல்வேறு தளங்களில் பயணம் செய்தவர். கடந்த 1975ம் ஆண்டில் வெளியான மேல்நாட்டு மருமகள் என்ற படத்தின்மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்த இவர் கோபுர வாசலிலே, கரகாட்டக்காரன், சின்னத்தாயி, சங்கமம், வின்னர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் முக்கியமான கேரக்டர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
சினிமா.. சீரியல்கள்: அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்திலும் நடித்துள்ள ஜூனியர் பாலையா, கடந்த 2021ம் ஆண்டில் வெளியான என்னங்க சார் உங்க சட்டம் என்ற படத்தில் இறுதியாக நடித்துள்ளார். அதை தொடர்ந்து அவர் படங்களில் நடிக்கவில்லை. முன்னதாக சித்தி, சின்ன பாப்பா பெரிய பாப்பா போன்ற தொடர்களிலும் ஜூனியர் பாலையா நடித்துள்ளார். இதனிடையே இன்று காலை மூச்சுத்திணறல் காரணமாக ஜூனியர் பாலையா தனது வீட்டில் உயிரிழந்துள்ளார்.
ஜூனியர் பாலையா மறைவு: இன்று அதிகாலையில் வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் ஜூனியர் பாலையாவிற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், அவரது உயிர் பிரிந்தது. அவரது உடலுக்கு திரையுலகினர், நண்பர்கள் அஞ்சலி செலுத்திய பின்பு நாளை அவரது இறுதிச்சடங்கு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இவர் குணச்சித்திர கேரக்டர்கள் மற்றம் நகைச்சுவை கேரக்டர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஜூனியர் பாலையா, ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
பிரபலங்கள் அஞ்சலி: 70 வயதான ஜூனியர் பாலையா மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது அஞ்சலியை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் உலகநாயகன் கமல்ஹாசனும் ஜூனியர் பாலையா மறைவிற்கு சமூக வலைதளம் மூலம் தனது அஞ்சலியை தெரிவித்துள்ளார். ஜூனியர் பாலையா ரகு தனக்கு பதின்பருவ நண்பராக அமைந்ததாக தெரிவித்துள்ளார். தந்தையை போலவே நாடக மேடைகளில் தன் கலையை துவங்கி, திரையில் வலம் வந்த ஜூனியர் பாலையை மறைந்து விட்டதையும் குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசன் அஞ்சலி: அவரது மறைவிற்கு அஞ்சலி தெரிவித்துள்ள கமல்ஹாசன், அவரது குடும்பத்தினருக்கும் தனது ஆறுதலை தெரிவித்துள்ளார். டிஎஸ் பாலையாவின் மூன்றாவது மகனான ஜூனியர் பாலையா, இவரை சினிமாவில் அறிமுகப்படுத்த நினைத்த இவரது தந்தை டிஎஸ் பாலையா, எம்ஆர் ராதாவை பிரதான கேரக்டரில் வைத்து சுட்டான் சுட்டேன் என்ற படத்தை துவங்கினார். ஆனால் இந்தப் படம் துவங்கப்பட்ட மூன்றே நாட்களில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து இந்தப் படத்தின் படப்பிடிப்பு நின்று போனது.


Click it and Unblock the Notifications











