Kamal haasan :போட்டோகிராபராக மாறி அசத்தும் உலகநாயகன்.. அடுத்தடுத்த களங்களில் கலக்கல்!
சென்னை : உலகநாயகன் என்ற பாராட்டிற்கு உரியவராக நமது தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளவர்.
சினிமாவில் நடிப்பில் மட்டுமில்லாமல் டைரக்ஷன், தயாரிப்பு, பாடகர், பாடலாசிரியர் என பல்வேறு தளங்களில் இவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.

போட்டோகிராபராக மாறிய கமல்ஹாசன் :
நடிகர் கமல்ஹாசன் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவராக காணப்படுகிறார். இவரது நடிப்பில் ஏராளமான படங்கள், சோதனை முயற்சியில் சாதனை புரிந்துள்ளது. இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் பாடகர், பாடலாசிரியர் என பல்வேறு தளங்களில் செயல்பட்டு வரும் கமல்ஹாசன், தற்போது நடிப்பில் மட்டுமில்லாமல் அரசியலிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் வெளியான இவரது விக்ரம் படம் மிகச்சிறந்த வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படம், ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இன்டஸ்ட்ரியல் ஹிட்டடித்துள்ளது. நீண்ட காலங்களுக்கு பிறகு கமல் நடிப்பில் மிகச்சிறந்த படைப்பாக விக்ரம் படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளார் கமல்ஹாசன். இதையடுத்து தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டவர்கள் உடன் நடித்து வருகின்றனர்.
இந்தப் படத்தின் சூட்டிங், சென்னை, ஐதராபாத், திருப்பதி, தைவான், ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் நடந்து முடிந்துள்ளது. இதனிடையே, இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லைகா தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 25 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகி வரும் இந்தியன் படத்தின் இரண்டாவது பாகம், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தின் சூட்டிங், தைவான், ஆப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளில் மிகவும் பிரம்மாண்டமான பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆப்பிரிக்காவில், ரயிலில் எடுக்கப்பட்ட சண்டைக்காட்சி மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. பிளாஷ்பேக்காக இந்தக் காட்சி எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த சூட்டிங்கின்போது, தொடர்ந்து கமலை, கேமராவும் கையுமாக பார்க்க முடிந்தது. அவரை போட்டோகிராபராகவே இந்தப் படப்பிடிப்புகளின் இடையில் பார்க்க முடிந்தது.

ப்ரொபஷனல் கேமராவுடன், ப்ரொபஷனல் கேமராமேனாகவே அவர் மாறியிருந்தார். சில புகைப்படங்களையும் அவர் வெளியிட்டிருந்தார். அந்தப் புகைப்படங்கள் மிகவும் அழகான பேக்கிரவுண்டில் எடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இன்றைய தினமும் அவர் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கேமராவுடன் அழகான கடற்கரையின் பின்புலத்தை அவர் தன்னுடைய கேமராவில் சிறைப்பிடிக்க முயற்சிப்பதாக காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











