சூரி கண்ணுக்கு தெரியவில்லை.. கொட்டுக்காளி படத்தை பார்த்துவிட்டு பாராட்டு பத்திரம் வாசித்த உலகநாயகன்!

சென்னை: நடிகர் சூரி -கூழாங்கல் பட இயக்குனர் வினோத் ராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் கொட்டுக்காளி. இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள நிலையில் படம் ரிலீசுக்கு முன்னதாக பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. முன்னதாக கூழாங்கல் என்ற படத்தை இயக்கி கோலிவுட்டில் கவனம் பெற்றுள்ள இயக்குனர் வினோத்ராஜின் 2வது படமாக உருவாகியுள்ளது கொட்டுக்காளி.

காலை முதல் மாலை வரை நடக்கும் சம்பவங்களின் கோர்வையாக இந்த படம் உருவாகியுள்ளதாகவும் இந்த படத்தை பார்த்து நடிகர் சிவகார்த்திகேயன் மிரண்டு விட்டதாகவும் சூரி தன்னுடைய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இத்தகைய நடிப்பு திறமையை இவ்வளவு நாட்கள் எங்கே வைத்திருந்தீர்கள் என்றும் இத்தகைய நடிகரையா தான் தோத்தாத்ரி என்று பலவாறாக கலாய்த்து வந்தேன் என்று சிவகார்த்திகேயன் கேட்டதாகவும் சூரி குறிப்பிட்டிருந்தார்.

Kamal haasan Kottukkaali movie Soori

கொட்டுக்காளி படம்: நடிகர் சூரி ஹீரோவாக நடித்துள்ள கொட்டுக்காளி படம் நாளை மறுதினம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. கடந்த ஆண்டில் சூரி ஹிரோவாக நடித்திருந்த விடுதலை படம் வெளியாகி அவருக்கு சிறப்பான ஹீரோ இமேஜை கொடுத்திருந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான கருடன் படமும் அந்த லிஸ்டில் இணைந்து கொண்டது. இந்நிலையில் சூரி ஹிரோவாக நடித்து மூன்றாவது படமாக கொட்டுக்காளி படம் வெளியாகவுள்ளது. இந்த படம் காலை முதல் மாலை வரை நடக்கும் சம்பவங்களின் கோர்வையாக உருவாகியுள்ளதாக சூரி தன்னுடைய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மிரண்ட சிவகார்த்திகேயன்: படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள நிலையில், கடந்த சில தினங்களாக இந்தப் படத்தின் பிரமோஷன்கள் மிக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. படத்தின் பிரமோஷன்களுக்காக சூரி, அன்னா பென் உள்ளிட்ட படக்குழுவினர் அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் கொட்டுக்காளி படத்தை பார்த்து படத்தின் தயாரிப்பாளரும் தன்னுடைய தம்பிமான சிவகார்த்திகேயன் மிரண்டு போனதாகவும் என்னண்ணே செஞ்சு வெச்சி இருக்கீங்க என்று தன்னிடம் மிரட்சியாக கேள்வி எழுப்பியதாகவும் சூரி தன்னுடைய பேட்டியில் கூறியிருந்தார். முன்னதாக கூழாங்கல் படத்தின் மூலம் கோலிவுட்டில் கவனத்தை பெற்று சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்ற வினோத் ராஜ் இயக்கத்தில் இரண்டாவது படமாக உருவாகியுள்ளது கொட்டுக்காளி.

கொட்டுக்காளி படத்தை பார்த்த கமல்ஹாசன்: கொட்டுக்காளி படமும் முதல் படத்தைப் போலவே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. இந்த படம் ரசிகர்களையும் திரையரங்குகளில் மிகப்பெரிய அளவில் கவரும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இந்தப் படமும் சிறப்பான வெற்றியை சூரிக்கு கொடுக்கும் நிலையில் அவர் இதன்மூலம் ஹாட்ரிக் வெற்றியை பெறுவார் என்று எதிர்பார்க்கலாம். இந்நிலையில் இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன், சூரி மற்றும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து இன்றைய தினம் பார்த்துள்ளார். படத்தை பார்த்துவிட்டு அவர் படக்குழுவினரை பாராட்டி 3 பக்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். இதனை சிவகார்த்திகேயன் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து இது ஒரு பொக்கிஷம் என்று நெகிழ்ந்துள்ளார்.

Kamal haasan Kottukkaali movie Soori

கமல்ஹாசன் பாராட்டு கடிதம்: இந்தக் கடிதத்தில், படத்தில் சூரியை தவிர வேறு தெரிந்த முகங்கள் இல்லை என்று கூறியுள்ள கமல்ஹாசன், 3 நிமிடங்களுக்கு பிறகு அவரும் தெரியவில்லை. பாண்டியன் என்ற கேரக்டர் மட்டுமே தெரிந்தார் என்று பாராட்டு தெரிவித்துள்ளார். பின்னணி இசை என்று எதுவும் இல்லை என்பதை சுட்டிக் காட்டியுள்ள கமல்ஹாசன், இயற்கைதான் படத்தின் இசை என்பதையும் பாராட்டியுள்ளார். ஆணாதிக்க குறியீடுகளாக சேவல், சீறும் காளை, பாண்டியன், பூசாரி என பலர் இருந்தாலும் நாயகி அவற்றை எதிர்கொள்ளும் விதத்தையும் குறிப்பிட்டு பேசியுள்ளார். கடைசியில் பாண்டியனையும் நம்மையும் இயக்குநர் பகுத்தறிவின் கரையோரமாக மனிதத்தின் விளிம்பில் நிறுத்திவிட்டு சந்தோஷமாக கிளம்பியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Kamal haasan Kottukkaali movie Soori

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X