Kamal haasan: தீங்கில்லாத வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள்.. குழந்தைகள் தின வாழ்த்தை பகிர்ந்த கமல்ஹாசன்!
சென்னை: இன்றைய தினம் நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
ஐ நா சார்பில் நவம்பர் 20ம் தேதி உலக குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னதாக இந்தியாவிலும் இந்த தினமே குழந்தைகள் தினமாக இருந்தது.

கடந்த 1964ம் ஆண்டில் நேருவின் மறைவையொட்டி அவரது பிறந்தநாளை குழந்தைகள் தினமாக கொண்டாட நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குழந்தைகள் தினக் கொண்டாட்டம்: இன்றைய தினம் நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் மறைந்த நேருவின் பிறந்தநாளை குழந்தைகள் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம். இதற்கான தீர்மானம் கடந்த 1964ம் ஆண்டில் நேருவின் மறைவிற்கு பின்பு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக உலக குழந்தைகள் தினமான நவம்பர் 20ம் தேதிதான் இந்தியாவிலும் கொண்டாடப்பட்டு வந்தது.
குழந்தைகள் தினம்: இன்றைய தினம் நவம்பர் 14ம் தேதி இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் உலக நாயகன் கமல்ஹாசனும் தன்னுடைய குழந்தைகள் தின வாழ்த்துக்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தீங்கில்லாத மகிழ்வான கல்வி பெறும் சூழல்கொண்ட வாழ்க்கை வாழ சிறாருக்கு குழந்தைகள் தின வாழ்த்துக்கள் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
குழந்தை மனம் கொண்டோருக்கும் வாழ்த்து: மேலும் குழந்தை மனம் கொண்டோருக்கும் வாழ்த்து உரித்தாகட்டும் என்றும் கமல்ஹாசன் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவிற்கு அவரது ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகின்றனர். அவரது புகைப்படத்தை பதிவிட்டு, குழந்தை சிரிப்பு என்றும் குழந்தைகள் தின வாழ்த்துக்களையும் பதிவிட்டுள்ளனர். முன்னதாக முன்னாள் பிரதமர் மறைந்த நேருவின் பிறந்தநாளுக்கும் கமல்ஹாசன் தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். நேருவிற்கு பிறந்தநாள் வாழ்த்து: நேரு பிறந்தநாளில் அவர் செய்த சீர்த்திருத்தங்களையும் கொண்டுவந்த மறுமலர்ச்சிகளையும் மனம் கொள்வோம் என்று கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு முக்கியமான நாட்களிலும் கமல்ஹாசன் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வரும் சூழலில் இன்றைய தினம் மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாள் மற்றும் அதையொட்டிய குழந்தைகள் தினத்திற்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்தப் படங்கள்: தற்போது இந்தியன் 2 மற்றும் கல்கி 2898 AD படங்களை நிறைவு செய்துள்ள கமல்ஹாசன், அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் இணையவுள்ளார். தொடர்ந்து மணிரத்னத்தின் இயக்கத்தில் KH234 படத்திலும் கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தின் அறிமுக வீடியோ மற்றும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு சமீபத்தில் அவரது பிறந்தநாளையொட்டி அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தையும் இந்தியன் 2 படத்தின் ரிலீசையும் ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











