Kamal Haasan: ஹெச் வினோத்திற்கு வாழ்த்துக்களை பகிர்ந்த உலகநாயகன்.. வீடியோ வெளியிட்ட டீம்!

சென்னை: இயக்குநர் ஹெச் வினோத் இன்றைய தினம் தன்னுடைய 42வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இதையொட்டி அவருக்கு பல்வேறு தரப்பினரும் ரசிகர்களும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அடுத்ததாக அவர் கமல்ஹாசனின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் இணையவுள்ள நிலையில் கமல்ஹாசனும் தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

Actor Kamal haasan wishes his director H Vinoth for his birthday

இயக்குநர் ஹெச் வினோத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்த கமல்ஹாசன்: இயக்குநர் ஹெச் வினோத் சதுரங்க வேட்டை படத்தின்மூலம் அறிமுகமான நிலையில், முதல் படத்திலேயே வித்தியாசமான கதைக்களத்தில் அனைத்து தரப்பினரையும் மிரட்டினார். மனிதர்களை ஏமாளியாக்கும் யுத்திகளை பயன்படுத்தி சக மனிதர்களே சுரண்டும் இந்தப் படத்தின் திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் மிரட்டியது. படத்தின் நாயகனாக நட்ராஜ் நடித்திருந்த நிலையில், இந்தப் படம் மிரட்டலாக அமைந்தது. ரகிர்களும் படத்தை கொண்டாடினார்கள்.

இந்தப் படத்தின்மூலம் கிடைத்த வரவேற்பு, அடுத்ததாக கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கும் வாய்ப்பை ஹெச் வினோத்திற்கு பெற்றுத் தந்தது. இந்தப் படத்திலும் ரசிகர்களை கவரும் பல யுக்திகளை கையாண்டிருந்தார் ஹெச் வினோத். வட மாநில கொள்ளையர்களை மையமாக வைத்து உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் வெளியான நிலையில், இந்தப் படத்தில் தன்னுடைய ஆழமான அழுத்தமான வசனங்களால் ரசிகர்களை கவர்ந்திருந்தார் ஹெச் வினோத்.

முதல் இரண்டு படங்கள் ஏற்படுத்திய தாக்கம் மற்றும் வரவேற்பு இவை மட்டுமில்லாமல் சிறப்பான வசூல் ஆகியவை அடுத்ததாக அஜித் படங்களை இயக்கும் வாய்ப்பை அடுத்தடுத்து ஹெச் வினோத்திற்கு ஏற்படுத்திக் கொடுத்தது. முதல் படமான நேர்கொண்ட பார்வை படத்திலேயே அஜித்தை அதிகமாக கவர்ந்திருந்தார் வினோத். அடுத்தடுத்து வலிமை, துணிவு என சிறப்பான படங்களை அஜித்திற்கும் அதன்மூலம் ரசிகர்களுக்கும் கொடுத்தார்.

ஹாட்ரிக் வெற்றியாக இந்த மூன்று படங்களை இயக்கிய ஹெச் வினோத்திற்கு கோலிவுட்டில் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. அடுத்ததாக உலகநாயகனை இயக்கும் வாய்ப்பும் இதன்மூலம் கிடைத்துள்ளது. கமலின் KH233 படத்தை இயக்கவுள்ளார் ஹெச் வினோத். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பு வெளியான நிலையில், விரைவில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் தன்னுடைய 42வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் ஹெச் வினோத். இதையடுத்து அவருக்கு திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதனிடையே நடிகர் கமல்ஹாசனும் ட்விட்டர் மூலம் ஹெச் வினோத்திற்கு வாழ்த்துக்களை இருவரும் இணைந்துள்ள புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். சமூக இருள் நீங்க, திரை ஒளி பாய்ச்சும் தம்பி ஹெச் வினோத் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று அவர் கூறியுள்ளார்.

இதனிடையே கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனமும் கமலின் இந்தப் பதிவையொட்டி, தங்களது வாழ்த்துக்களை ஹெச் வினோத்திற்கு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சதுரங்க வேட்டையில் துவங்கிய ஹெச் வினோத்தின் சாதனை பயணத்தை குறிப்பிடும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த வீடியோவில் அவரது படங்களின் ஒன்லைனும் குறிப்பிடப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X