Kamalhaasan: அண்ணனுக்கும் பிறந்தநாள்.. தம்பிக்கும் பிறந்தநாள்.. மகிழ்வான தருணத்தை பகிர்ந்த கமல்ஹாசன்
சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் தற்போது இந்தியன் 2 படம் உருவாகியுள்ளது. இந்த படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள சூழலில் நேற்றைய தினம் இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்திக் முடிக்கப்பட்டுள்ளது.
தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இந்நிலையில் இன்றைய தினம் மணிரத்னம் மற்றும் இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி அவர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். தன்னுடைய அண்ணனுக்கும் பிறந்தநாள் என்று குறிப்பிட்டுள்ள அவர் இதே போல தம்பிக்கும் பிறந்த நாள் என்று குறிப்பிட்டு மகிழ்வான தருணம் என்று தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன்: நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்ததாக இந்தியன் 2 படம் ரிலீசாகவுள்ளது. முன்னதாக இந்த படம் ஜூன் மாதத்தில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு தற்போது ஜூலை மாதத்திற்கு படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. படத்தின் இசை வெளியீடு நேற்றைய தினம் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், சிம்பு உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர். மேலும் கமல்ஹாசன், ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர்.

இளையராஜா -மணிரத்னம் பிறந்தநாள்: தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இந்த கூட்டணி 30 ஆண்டுகளுக்கு முன்னதாக நாயகன் படத்தில் இணைந்திருந்தது. இந்தப் படம் பெஸ்ட் படமாகவும் அமைந்தது. இந்நிலையில் தற்போது கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் மீண்டும் இணைந்துள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் சிம்புவும் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்றைய தினம் மணிரத்னம் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா இருவரும் தங்களது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.

கமல்ஹாசன் வாழ்த்து: இதையொட்டி நடிகர் கமல்ஹாசன் அவர்கள் இருவருக்கும் தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தன்னுடைய எக்ஸ் தள பக்கம் மூலம் பதிவு செய்துள்ளார். தன்னுடைய அண்ணனுக்கும் பிறந்தநாள் தம்பிக்கும் பிறந்தநாள் என்று கூறியுள்ள கமல்ஹாசன், மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இரட்டிப்பு சந்தோஷம் என்பது தமிழில் விந்தையான சொற்றொடர் என்றும் சந்தோஷத்திற்கு அளவீடு இருக்க முடியுமா என்று கேட்டுள்ளார். ஆனால் அதற்கு ஒரு உதாரணம் போன்றதுதான் இன்றைய நாள் தனக்கு என்றும் குறிப்பிட்டுள்ளார். மூன்று சகோதரர்களில் அண்ணனுக்கும் தம்பிக்கும் பிறந்தநாள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூவரின் கலைச்சொந்தம் தொடர்க: தொடர்ந்து இசையில் கதையை சொல்லிவிடும் அன்பான அண்ணன் இளையராஜா என்றும் திரையெழுத்தில் ஒரு ரீங்காரத்தை சேர்த்துவிடும் அன்பு தம்பி மணிரத்னம் என்றும் குறிப்பிட்டுள்ளார் கமல்ஹாசன். பிறந்தநாளில் இருவரையும் மனம் இனிக்கும் மகிழ்ச்சியுடன் ஆரத்தழுவி வாழ்த்துவதாகவும் கூறியுள்ளார். மேலும் தங்கள் மூவரின் கலைச்சொந்தம் என்றென்றும் தொடர்க என்றும் கூறி முடித்துள்ளார் கமல். முன்னதாக இளையராஜாவுடன் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளார் கமல்ஹாசன். அவரது பல படங்களில் இளையராஜாவின் இசையும் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











