Aalavandhan: புது பொலிவுடன் ஆளவந்தான் திரைப்படம் ரீ ரிலீஸ்.. எப்போ தெரியுமா?

சென்னை: கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் படம் உலகமெங்கும் ஆயிரம் திரையரங்கில் மீண்டும் ரீ ரிலீஸாக உள்ளது.

தமிழ் சினிமா வரலாற்றிலேயே 400 கோடி ரூபாய் செலவில் 650 திரையரங்குகளில் வெளியான ஒரே திரைப்படம் ஆளவந்தான் படம் தான்.

actor kamal haasans aalavandhan movie re release confirmed

2001 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் கமல் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். மேலும், மனிஷா கொய்ராலா, ரவீனா டான்டன், அனு ஹாசன் என பலர் நடித்திருந்தனர்.

ஆளவந்தான்: இந்திய வரலாற்றிலேயே அதிக அளவு பிரிண்ட் செய்யப்பட்ட இந்த படத்தில், கடவுள் பாதி... மிருகம் பாதி... உள்ளே கடவுள் வெளியே மிருகம் விளங்க முடியாத கவிதை நான் எனக் கமலஹாசனின் நடிப்பு பலரின் பாராட்டை பெற்றது. படம் வெளியான போது பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.

நவீன டெக்னாலஜி: இத்திரைப்படத்தில் அதி நவீன டெக்னாலஜியாகக் கருதப்பட்ட motion control camera பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் இந்த டெக்னாலஜி முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்ட படம் ஆளவந்தான் படம் தான். படம் வெளியான போது வரவேற்பை பெறாத இத்திரைப்படத்தை பின்னாளில் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

actor kamal haasans aalavandhan movie re release confirmed

தயாரிப்பாளர் தாணு: இந்த படம் குறித்து அண்மையில் பேட்டி அளித்திருந்த தயாரிப்பாளர் தாணு இன்றைய தலைமுறையினருக்கு ஆளவந்தான் படம் ஒரு உத்வேகமாக இருக்கும் என்பதற்காக ரீ ரிலீஸ் செய்யும் திட்டம் உள்ளது. அப்பவே லேட்டஸ்ட் டெக்னாலஜியில் அந்தப் படம் வெளியானது. இப்போது இன்னும் நவீன தரத்தில், புதிய சவுண்ட் தொழில்நுட்பத்தில் வெளியாகும்.

முதலில் படத்தின் சிங்கிள் வெளியாகும், அதனைத் தொடர்ந்து டீசர், டிரெய்லர் எனப் புதுப்படத்தின் ப்ரொமோஷன் போல, ஆளவந்தன் படத்தின் அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளியாகும் என தாணு அந்த பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

ஆளவந்தான் ரீ ரிலீஸ்: இந்நிலையில், ஆளவந்தான் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு, ஆளவந்தான் படம் 22 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் ரீதியாக மேம்படுத்தப்பட்ட படமாக 1000 திரையரங்குகளில் உலகமெங்கும் விரைவில் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனை உலக நாயகன் கமல்ஹாசன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X