Guna re-release: கண்மணிக்கு காதலன் எழுதிய கடிதம். கமல்ஹாசனின் குணா படம் ஜூன் 21 ரீ-ரிலீஸ்!

சென்னை: நடிகர் கமல்ஹாசன் -இயக்குநர் சந்தான பாரதி கூட்டணியில் கடந்த 1991ம் ஆண்டில் தீபாவளி கொண்டாட்டமாக வெளியானது குணா படம். கமல்ஹாசனின் படங்கள் ரிலீசாகும்போது போதிய வரவேற்பை எப்போதுமே பெறுவதில்லை. மாறாக பல ஆண்டுகள் கழித்தே அந்தப்படம் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகும்.

அந்த வகையில், எதிர்பார்ப்பில்லாத காதலை மையமாக கொண்டு வெளியான குணா, படம் சமீபத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் படம் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்தப் படத்தில் காட்டப்பட்ட குணா குகை மற்றும் கண்மணி அன்போடு பாடல் ஆகியவை, கமல்ஹாசனின் குணா படத்தை ரசிகர்கள் தேடி பார்க்க வைத்துள்ளன.

Kamal haasan Guna tamil cinema

நடிகர் கமல்ஹாசன்: நடிகர் கமல்ஹாசன் -இயக்குநர் சந்தான பாரதி கூட்டணியில் கடந்த 1991ம் ஆண்டு தீபாவளி கொண்டாட்டமாக வெளியான படம் குணா. சுவாதி சித்ரா இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவான இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் உலகம் முழுவதும் வெளியிட்டது. 33 வருடங்கள் கடந்த பின்னரும் கமல்ஹாசன் ரசிகர்கள் மட்டுமின்றி தலைமுறை கடந்து இன்றைய இளம் தலைமுறையினரும் குணா படத்தையும், அதில் இடம்பெற்றுள்ள வசனங்களையும், பாடல்களையும் நினைவூட்டி கொண்டாடி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் படமும் இந்தப் படத்திற்கு சிறப்பான வரவேற்பை மீண்டும் கொண்டுவந்துள்ளது.

மஞ்சுமெல் பாய்ஸ் படம்: மலையாள படமான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டின் நகரம் முதல் குக்கிராமத்தில் உள்ள திரையரங்குகள் வரை திரையிடப்பட்டு வசூலை வாரிக் குவித்தது. மலையாள திரைப்படங்களில் 200 கோடி ரூபாய் மொத்த வசூலை கடந்த முதல் மலையாள திரைப்படம் என்கிற சாதனையை இந்தப் படம் நிகழ்த்த அடிப்படை காரணங்களில் ஒன்றாக குணா திரைப்படமும் அமைந்தது. குணா திரைப்படத்தில் இடம்பெற்ற வசனம், பாடல்களை மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் பயன்படுத்தியிருந்தனர். குணா திரைப்படம் வெளியானபோது கூட திரையரங்குகளில் இந்தப் படத்தின் வசனங்கள், பாடல்களுக்கு இந்தளவு வரவேற்பு கிடைக்கவில்லை.

குணா படம்: இன்றைய தலைமுறையினர் குணா படத்தின் பாடல்களையும் குணா குகையையும் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் ஆரவாரத்துடன் கொண்டாடினர். இதை பார்த்து தன்னுடைய உடல் புல்லரித்து போனதாக குணா படத்தை இயக்கிய சந்தான பாரதி தெரிவித்திருந்தார். இந்தப் படத்தில் அவரது இயக்கம், இளையராஜா இசை, பாலகுமாரன் வசனம் மற்றும் வேணு ஒளிப்பதிவு மிகப்பெரிய பலத்தை கொடுத்திருந்தது. இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன், ரோஷினி, ரேகா, ஜனகராஜ், அஜய் ரத்னம், எஸ். வரலட்சுமி, கிரீஷ் கர்னாட், எஸ்பி பாலசுப்பிரமணியம், சரத் சக்சேனா உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்திருந்தனர்.

குணா ரீ-ரிலீஸ்: வாலி எழுதிய பாடல்களை கமல்ஹாசன், எஸ் ஜானகி, இளையராஜா, யேசுதாஸ் ஆகியோர் பாடியிருந்தனர். 1991ம் ஆண்டு வெளியான நேரடி தமிழ் திரைப்படங்களில் தமிழ்நாடு அரசு வழங்கிய சிறந்த திரைப்படத்திற்கான 3வது பரிசை குணா வென்றது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசன் திரையுலக வாழ்க்கையிலும், தமிழ் சினிமா வரலாற்றிலும் தவிர்க்க முடியாத திரைப்படமாக இருந்து வரும் குணா திரைப்படம் டிஜிட்டல் வடிவத்தில், மெருகூட்டப்பட்டு கமல்ஹாசனின் ரசிகர்களின் நீண்ட நாள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் வரும் ஜூன் 21ம் தேதி உலகம் முழுவதும் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இந்தப் படத்தை திரையரங்குகளில் கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X