குணா ரீ ரிலீஸ்.. கமல்ஹாசனின் படத்துக்கு பிரபலங்கள் கொடுத்த விமர்சனம்.. மழையில் மாட்டிக்கிச்சே!
சென்னை: கமல்ஹாசன், ரோஷினி, ரேகா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து சந்தானபாரதி இயக்கத்தில் வெளியான குணா படம் வெளியாகி 33 ஆண்டுகளை கடந்துள்ளது. இந்தப் படம் வெளியானபோது படத்தை கொண்டாட ரசிகர்கள் தவறினர். அப்போது இந்தப்படம் மனநிலை பாதிக்கப்பட்ட நபரின் வாழ்க்கையாகவே பார்க்கப்பட்டது.
ஆனால் இந்தப்படத்தை தற்போதைய தலைமுறை கொண்டாட காரணமாக அமைந்தது மஞ்சுமெல் பாய்ஸ் படம். தமிழின் பெருமையை, தமிழ்படங்களின் பெருமையை மற்றவர்கள் எடுத்துக்கூறும்போதுதான் அதன் பெருமையே தமிழ் ரசிகர்களுக்கு தெரிகிறதோ என்ற பிம்பத்தை இந்த மலையாள படம் ஏற்படுத்தியுள்ளது.

குணா படம்: நடிகர் கமல்ஹாசன், ரோஷினி, ரேகா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த குணா படத்தை சந்தானபாரதி இயக்கியிருந்தார். இந்தப் படம் அந்த காலகட்டத்தில் கொண்டாடப்படாமல் சொதப்பலான முடிவையே எட்டியது. ஆயினும் தொலைக்காட்சிகளில் இந்தப் படம் ஒளிபரப்பாகும்போது படத்தை கண்கொட்டாமல் பார்த்தவர்கள் அதிகமானவர்கள் உண்டு. அதேபோல இந்தப்படத்தின் பாடல்கள் மிகப்பெரிய பலமாக அமைந்தன. குறிப்பாக கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதம் பாடல் காதலை மாற்றுக் கோணத்தில் கொடுத்தது. இதேபோல பார்த்தவிழி பாடலும் இளையராஜா இசைக்கு மற்றொரு சான்றாகவே பார்க்கப்பட்டது.
தள்ளிப்போன ரீ-ரிலீஸ்: இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடினாலும் அவர்களை மேலும் கொண்டாட செய்தது மஞ்சுமெல் பாய்ஸ் மலையாள படம்தான். இநதப் படத்தில் இடம்பெற்ற குணா குகையையும் க்ளைமாக்சில் சரியாக பயன்படுத்தப்பட்ட கண்மணி அன்போடு பாடலும் சரி, குணா படத்தை சரியாக கொண்டாட தவறிவிட்டோமோ என்ற நினைப்பை தமிழ் ரசிகர்களுக்கு கொடுக்கத்தான் செய்தது. இந்நிலையில் குணா படம் கடந்த ஜூன் மாதத்திலேயே ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இந்தப் படத்தின் ரீ-ரிலீசுக்கு தடைவிதிக்கக்கோரி கன்ஷியாம் ஹேம்தேவ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் அது நிகழாமல் போனது.
பாடலை ஒன்ஸ்மோர் கேட்ட ரசிகர்கள்: இந்நிலையில் இந்த வழக்கு முடிந்து நேற்றைய தினம் படம் ரீ - ரிலீசாகியுள்ளது. இந்நிலையில் கமலா திரையரங்கில் இந்தப் படத்தை ரோபோ ஷங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர், நடிகை ரேகா உள்ளிட்டவர்கள் ரசிகர்களோடு சேர்ந்து பார்த்து ரசித்துள்ளனர். இந்தப் படத்தின் பாடல்களின்போது ரசிகர்களின் கொண்டாட்டத்தையும் பார்க்க முடிந்தது. ஒரு கட்டத்தில் படத்தின் பாடலை ரிப்பீட்டு கேட்டு மீண்டும் ஒளிபரப்ப செய்துள்ளார் நடிகர் ரோபோ ஷங்கர். படத்தை பார்த்த ரசிகர்கள் விண்வெளி நாயகனுக்கு எந்த காலத்திலும் அழிவில்லை என்று தங்களது நெகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர்.
கேரக்டர் குறித்து ரேகா பெருமிதம்: இந்தப் படத்தை முதல் முறையாக பார்ப்பதால் ரீ-ரிலீஸ் படம் பார்க்கும் ஃபீல் இல்லை என்றும் கூறியுள்ளனர். இந்த வயதிலும் இவ்வளவு ரசிகர்கள் உள்ளார்களா என்றும் கேள்வி எழுப்பினர். இதனிடையே கமல்ஹாசனுக்காக எந்த எல்லைக்கும் போவோம் என்று ரோபோ ஷங்கர் பேசியுள்ளார். படத்தில் தன்னுடைய கேரக்டர் ரோசி அசிங்கம் என்று கமல்ஹாசன் கூறுவதாக காட்சிகள் அமைந்திருந்த நிலையில், தன்னுடைய கேரக்டர் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளதாக நடிகை ரேகாவும் தன்னுடைய உற்சாகத்தை பகிர்ந்திருந்தார். டிஜிட்டலில் குணா படம் மாற்றப்பட்டு புதுப்பொலிவுடன் ரிலீசாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











