Anirudh: அனிருத்தை உற்சாகத்தில் கட்டியணைத்த இயக்குநர் ஷங்கர்.. சம்பவத்திற்கு காத்திருக்கும் ரசிகர்கள்!

சென்னை: நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இந்தியன் 2 படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என இரு வேறு பாகங்களாக அடுத்தடுத்து ஆறு மாத இடைவெளியில் ரிலீசாகவுள்ளதாக படக்குழு சார்பில் முன்னதாக அறிவிக்கப்பட்டது.

வரும் ஜூலை மாதத்தில் இந்தியன் 2 ரிலீசாகவுள்ள நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரியில் பொங்கல் பண்டிகையையொட்டி இந்தியன் 3 திரைப்படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையின் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி இன்றைய தினம் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்து வருகிறது. படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Kamal haasan Indian 2 movie Shankar tamil cinema

இந்தியன் 2 படம்: நடிகர் கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் இந்தியன் 2 படம் ஜூலை மாதத்தில் ரிலீசாகவுள்ளது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தப் படம் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. படம் அடுத்த மாதத்தில் ரிலீசாகவுள்ள சூழலில், இன்றைய தினம் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷன் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்து வருகிறது. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள சூழலில் அவர் இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் லைவாக படத்தின் பாடல்களை பாட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னணி நடிகர்கள்: இந்த நிகழ்ச்சியில் சிம்பு, சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ், ஹெச் வினோத் உள்ளிட்டவர்களும் பங்கேற்க உள்ள சூழலில் இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சி மிகவும் கலர்புல்லாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். முன்னதாக இந்தியன் 2 படத்தின் ஆல்பத்தை அனிருத் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இந்தியன் 2, கமல்ஹாசன், அனிருத், ஷங்கர் உள்ளிட்டவர்களும் ட்விட்டரில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளனர். இதில் அடுத்தடுத்த வீடியோக்களை படக்குழுவும் ரசிகர்களும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த படத்தின் இசையை அமைத்துள்ள அனிருத் -ஷங்கர் இணைந்துள்ள வ வெளியாகி மாஸ் காட்டியுள்ளது.

அனிருத்தை கட்டியணைத்த ஷங்கர்: இந்த வீடியோவில் மிகவும் மும்முரமாக தன்னுடைய இசை கோர்ப்பு பணியை அனிருத் மேற்கொள்வதாகவும் அருகில் இருந்து அதை பார்க்கும் ஷங்கர் உற்சாகமடைந்து அவரை கட்டி அணைப்பதாகவும் காணப்படுகிறது. முன்னதாக இந்த படத்தின் அடுத்தடுத்து இரு லிரிக் வீடியோ பாடல்கள் வெளியாகி மாஸ் காட்டியுள்ள சூழலில் இந்த படத்தின் ஒட்டுமொத்த இசை வெளியீடு இன்றைய தினம் நடக்கவுள்ளது. படத்தின் ரிலீஸுக்கு இன்னும் ஒரு மாத காலத்திற்கு மேல் இடைவெளி உள்ள சூழலில் தற்போதே இந்த படத்தின் இசை வெளியீட்டை படக் குழுவினர் நடத்தியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜூலை மாத ரிலீஸ்: கடந்த 2018லேயே இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கப்பட்ட சூழலில் சில காரணங்களால் இந்த படம் முடங்கியது. தொடர்ந்து கடந்த ஆண்டில் இந்த படத்தின் சூட்டிங் மீண்டும் துவங்கப்பட்டு தற்போது படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இது மட்டுமில்லாமல் படத்தின் நீளம் கருதி படம் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என இரண்டு பாகங்களாக அடுத்தடுத்து வெளியாக உள்ளது. ஜூலை மாதத்தில் இந்தியன் 2 படம் ரிலீசாகவுள்ள சூழலில் அடுத்த ஆண்டு ஜனவரியில் பொங்கலை ஒட்டி இந்தியன் 3 திரைப்படம் ரிலீசாக உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதல் பாகமும் வரும் ஏழாம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில் அந்தப் படத்தையும் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X