Indian 2 movie: ஐதராபாத்தில் நாளை நடக்கும் இந்தியன் 2 படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி.. ஏற்பாடுகள் ஜரூர்!
ஐதராபாத்: நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திற்காக மிகப்பெரிய அளவில் புரமோஷன்கள் செய்யப்பட்டு வருகிறது. வரும் 12ம் தேதி இந்த படம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ள நிலையில் இந்தியாவில் சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்களில் பிரமோஷன்களில் ஈடுபட்ட படக்குழுவினர் சிங்கப்பூர், மலேசியாவிலும் பிரமோஷன்களை மிகச் சிறப்பாக நடத்தி முடித்துள்ளனர்.
இந்நிலையில் நாளைய தினம் ஹைதராபாத்தில் இந்த படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக இந்த நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஆறு தினங்களில் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இது குறித்த பிரமோவை லைகா நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்தியன் 2 படம்: நடிகர் கமல்ஹாசன் -இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன் 2 படம் வரும் 12ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த 1996ம் ஆண்டில் வெளியான நிலையில் தற்போது 28 ஆண்டுகளை கடந்து படத்தின் இரண்டாவது பாகம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. முதல் பாகத்தில் சேனாபதி மற்றும் சந்த்ரூ என இரட்டை வேடங்களில் அதிரடி காட்டிய கமல்ஹாசன், இந்த படத்தில் சேனாபதி கேரக்டரில் ஆக்ஷன் காட்சிகளில் அதகளம் செய்துள்ளார். இந்த படத்தின் ட்ரெயிலர் முன்னதாக வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது.
பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி: இந்த ட்ரெய்லரை மும்பையில் சிறப்பான ஈவண்டில் வைத்து படக்குழுவினர் ரிலீஸ் செய்துள்ளனர். முன்னதாக இந்த படத்தை இசை வெளியீடு கடந்த மாதம் 1ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நாளைய தினம் ஹைதராபாத்தின் கன்வென்ஷன்ஸ் மைதானத்தில் மாலை 6 மணியளவில் நடக்க உள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படம் இன்னும் சில தினங்களில் ரிலீசாக உள்ள நிலையில் அது குறித்தும் வீடியோ ஒன்றை லைகா நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது
அடுத்தடுத்த பிரமோஷன்கள்: இந்த படத்தின் பிரமோஷன்களுக்காக சென்னை, மும்பையில் மட்டுமில்லாமல் சிங்கப்பூர், மலேசியா என அடுத்தடுத்த இடங்களுக்கு படக்குழுவினர் சென்று வந்தனர். படம் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, சமுத்திரகனி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் சித்தார்த் ஹீரோவாக நடித்துள்ள நிலையில் அவருக்கு அதிகமான காட்சிகள் படத்தில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவரது அப்பாவாக சமுத்திரக்கனி நடித்துள்ளார். இவரும் தனது கேரக்டர் குறித்து சமீபத்தில் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்த படங்கள்: இந்நிலையில் இன்னும் ஆறு நாட்களில் ரிலீசாக உள்ள இந்தியன் 2 படம் முதல் பாகத்தைப் போலவே வசூலிலும் வரவேற்பிலும் மாஸ் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கமல்ஹாசனின் கல்கி 2898 AD படம் ரிலீசாகி சிறப்பான வரவேற்பை பெற்று வசூலிலும் 800 கோடிகளை சில தினங்களிலேயே கடந்துள்ளது. இந்நிலையில் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்களும் கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் கமல் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











