Indian 2: மே மாதத்தில் நடக்கும் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீடு.. எங்க நடக்குது தெரியுமா?

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை தொடர்ந்து அவர் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் மிகவும் ஆர்வத்துடன் கமிட்டாகி வருகிறார். அவரது நடிப்பில் அடுத்ததாக இந்தியன் 2 மற்றும் கல்கி 2898 ஏடி படங்கள் வரும் ஜூன் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளன. இந்த படங்களின் அடுத்தடுத்த பிரமோஷன்கள் சிறப்பாக நடைபெற உள்ளன.

இந்தியன் 2 படத்தின் இசை வெளியீடு மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியீடு குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் கடந்த 2018ம் ஆண்டில் துவங்கப்பட்ட சூழலில் இந்த காலகட்டத்திற்கும் ஏற்ற கதைக்களத்தை இந்தப் படம் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய ஹிட் கொடுத்த சூழலில் தற்போது இந்தியன் 2 ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

Actor Kamal haasan s Indian 2 movie music launch planned on May 16th in grand manner

இந்தியன் 2 படம்: நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தியன் 2 படம் வரும் ஜூன் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனேகமாக இந்த படம் வரும் ஜூன் மாதம் 13ம் தேதி ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆயினும் இந்தப் படத்தின் ஒரு பாடல் சூட்டிங் மீதம் உள்ளதாகவும் அதனால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஒரேயொரு பாடல் மட்டுமே சூட்டிங் எடுக்கப்பட வேண்டியுள்ளதால் அதை விரைவில் முடித்துவிட்டு இயக்குனர் ஷங்கர் படத்தில் சேர்ப்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

ஜூன் மாதத்தில் ரிலீசாகும் இந்தியன் 2: ஆயினும் முன்னதாகவே இந்தப் படத்தின் ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ளதால் கோடை கொண்டாட்டத்தை இந்த படம் சரியாக பயன்படுத்திக் கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படம் ஜூன் மாதத்தில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில், படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்கள் விரைவில் துவங்கவுள்ளன. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் வரும் மே மாதம் முதல் வாரத்தில் ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது கமல்ஹாசனின் இன்ட்ரோ பாடலாக அமையலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த பாடலின் சூட்டிங் தான் இன்னும் எடுக்கப்பட வேண்டும் என்று படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

மே முதல் வாரத்தில் ஃபர்ஸ்ட் சிங்கிள்: இந்நிலையில் இந்த பாடல் ஃபர்ஸ்ட் சிங்களாக வெளியாகுமா அல்லது மற்ற பாடல் ஏதேனும் வெளியாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனிடையே இந்த படத்தின் இசை வெளியிடும் அடுத்த மாதத்தில் திட்டமிடப்பட்டுள்ளதாக படக்குழு சார்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன. மே மாதம் 16ம் தேதி படத்தின் இசை வெளியீடு நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷங்கர் எப்போதுமே தன்னுடைய படங்களை மட்டும் இல்லாமல் இசை வெளியீட்டையும் மிகவும் பிரம்மாண்டமாகவே திட்டமிடுவார். அந்த வகையில் இந்த படத்தின் இசை வெளியிடும் மிகவும் பிரம்மாண்டமாக நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Actor Kamal haasan s Indian 2 movie music launch planned on May 16th in grand manner

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அனிருத்: கடந்த 2018 ஆம் ஆண்டிலேயே அறிவிக்கப்பட்டு குறிப்பிட்ட சதவீத சூட்டிங் நடத்தப்பட்டதாக கூறப்பட்ட இந்தியன் 2 படம், சூட்டிங்கில் ஏற்பட்ட விபத்து உள்ளிட்ட சில காரணங்களால் நிறுத்தப்பட்டு படம் முடங்கியது. இந்நிலையில் இந்த படத்தின் சூட்டிங் மீண்டும் தூசி தட்டப்பட்டு எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. படத்தின் நீளம் கருதி படம் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என இரு பாகங்களாக அடுத்தடுத்து இந்த ஆண்டிலேயே ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் இரண்டாவது பாகம் ஜூன் மாதத்திலும் மூன்றாவது பாகம் டிசம்பரில் கிறிஸ்மஸ் பண்டிகையொட்டியும் ரிலீசாகும் என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே அனிருத் இசையில் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X