Indian 2: கமல்ஹாசனின் அடுத்தடுத்த ரிலீஸ்.. இந்தியன் 2 எப்ப ரிலீஸ் தெரியுமா!

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2, கல்கி 2898 AD ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

இந்தியன் 2 படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ள நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் உள்ளிட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட நட்சத்தர பட்டாளமே இணைந்துள்ளது.

Actor Kamal haasans Indian 2 movie planning for Independence day week release

சுதந்திர தினத்திற்கு ரிலீசாகும் இந்தியன் 2 படம்: நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் ஷங்கர். இந்தப் படத்தின் சூட்டிங் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பரவலாக எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. தற்போது சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள், சிஜி வேலைகள் என விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதடையே விக்ரம் படத்தின் இன்டஸ்ட்ரியல் ஹிட், நடிகராகவும் தயாரிப்பாளராகவும் கமலை உற்சாகப்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது இந்தியன் 2 மற்றும் கல்கி 2898 AD படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் கமல்ஹாசன். இதில் கல்கி படத்தில் பிரபாசிற்கு வில்லனாகியுள்ளார் கமல். இந்தப் படத்திற்காக சில தினங்களே அவர் டேட்ஸ் கொடுத்துள்ளதாகவும் ஆனால் அவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்தப் படங்களின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு தொடர்ந்து தன்னுடைய தயாரிப்பில் கவனம் செலுத்தவுள்ளார் கமல்ஹாசன்.

அடுத்ததாக கமல் தயாரிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் KH233 படத்தின் சூட்டிங் அக்டோபரில் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படம் விவசாயத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பான் இந்தியா படமாக உருவாகவுள்ள இந்தப் படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளை ஹெச் வினோத் நிறைவு செய்துள்ளார். கமல் இந்தப் படத்திற்கான கதையை உருவாக்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியன் 2, கல்கி 2898 AD மற்றும் ஹெச் வினோத் படம் என அடுத்தடுத்த படங்கள் கமல் நடிப்பில் உருவாகியுள்ள நிலையில், இந்தப் படங்கள் அனைத்தும் அடுத்த ஆண்டில் அடுத்தடுத்து ரிலீசாகவுள்ளது. பொங்கல் ரிலீசாக கல்கி படம் திட்டமிடப்பட்ட நிலையில், அந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. இந்நிலையில் இந்தியன் 2 படமும் பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளதாகவே கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்தியன் 2 படம் சுதந்திர தினத்தையொட்டி ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படம் இரு பாகங்களாக உருவாகி அடுத்தடுத்து வெளியாகவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது படக்குழுவினர் அதை மறுத்துள்ளனர். ஒரே பாகமாகவே இந்தியன் 2 படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஷங்கர் -கமல் கூட்டணியில் வெளியான இந்தியன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், தற்போது இந்தியன் 2 படம் உருவாகியுள்ளது. இந்தப்படத்தில் பிரபல இயக்குநரும் நடிகருமான எஸ்ஜே சூர்யா கமலுக்கு வில்லனாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X