Indian 2: ஜூன் மாதத்திலிருந்து தள்ளிப்போகிறதா இந்தியன் 2 பட ரிலீஸ்.. என்ன பாஸ் இது!

சென்னை: நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் இந்தியன் 2. இந்தப் படத்தின் நீளம் கருதி இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என அடுத்தடுத்து இரு பாகங்களாக இந்த ஆண்டிலேயே வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் இந்தியன் 2 படம் வரும் ஜூன் மாதத்திலேயே ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது இந்த படத்தின் ரிலீசில் மாற்றம் ஏற்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படம் ஜூலை மாதத்தில் தான் ரிலீசாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2018ம் ஆண்டிலேயே இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் துவங்கப்பட்டு சில காரணங்களால் படம் முடங்கியது. இந்நிலையில் படம் சூட்டிங் நிறைவடைந்து ஜூன் மாதத்தில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டது. இதிலும் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

Actor Kamal haasan s Indian 2 movie release to be postponed it seems

நடிகர் கமல்ஹாசன்: நடிகர் கமல்ஹாசன் லீட் கேரக்டரில் நடித்துள்ள இந்தியன் 2 படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ள சூழலில், படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டிலேயே இந்த படத்தின் சூட்டிங் துவங்கிய நிலையில் ஷூட்டிங்கில் ஏற்பட்ட விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படம் முடங்கியது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் சூட்டிங் மீண்டும் துவங்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளது. படம் ரிலீசிற்கு தயாராகி உள்ளது. படத்தில் கமல்ஹாசனுடன் ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இந்தியன் 2 படம்: மிகவும் பிரம்மாண்டமாக அதிகமான பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தில் நீளம் கருதி இந்த படம் அடுத்தடுத்து இரண்டு பாகங்களாக இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என இந்த ஆண்டிலேயே ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் படம் ஜூன் மாதத்தில் ரிலீஸ் ஆகவுள்ளதாக தயாரிப்பு தரப்பு முன்னதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் ஒரு பாடல் காட்சியின் சூட்டிங் இன்னும் எடுக்கப்பட வேண்டும் என்று படக்குழு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. இதனிடையே தற்போது இந்த படத்தின் ரிலீஸ் ஜூன் மாதத்திலிருந்து ஜூலை மாதத்திற்கு தள்ளி போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரிலீசில் மாற்றம்: அடுத்தடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப் போவதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்தப் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியான சூழலில் விரைவில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டது. இந்த மாதம் 16ம் தேதி படத்தின் இசைவெளியீடு நடக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இவற்றில் மாற்றம் இருக்குமா என்பது குறித்த அப்டேட்டை படக்குழு விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே ஜூன் மாதத்தில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட தனுஷின் ராயன் படம், இந்தியன் 2 படத்தின் ரிலீசால் ஜூலை மாதத்திற்கு தள்ளி போனதாக கூறப்பட்டுள்ளது.

ராயன் ரிலீசிலும் சிக்கல்: இந்நிலையில் தற்போது இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகவுள்ளதாக கூறப்பட்டுள்ளதால் அதை தனுஷின் ராயன் படம் பயன்படுத்திக்கொண்டு ஜூன் மாதத்திலேயே ரிலீசாகுமா என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. ஆயினும் ராயன் படமும் ஜூன் மாதத்தில் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வரும் சூழலில் படத்தின் ரெக்கார்டிங் பணிகளை மேற்கொள்ள அவர் நேரம் எடுத்துக் கொள்வதாக கூறப்பட்டுள்ளது. சன் பிக்சர்சுடன் ஏற்பட்ட சில ஒப்பந்த பிரச்சனைகளால் இந்த படத்தின் ரீ ரெக்கார்டிங்கில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் ஜூன் மாதத்தில் வெளியாக திட்டமிடப்பட்ட இந்தியன் 2 மற்றும் ராயன் படங்களின் ரிலீஸ் ஜூலை மாதத்தில் இருக்குமா என்ற கேள்வி ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X