Indian 2: இணையத்தில் லீக்கான இந்தியன் 2 படத்தின் சூட்டிங் காட்சி.. படக்குழுவினர் அதிர்ச்சி!

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக ஏப்ரல் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் அறிமுக வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் படத்தின் ரிலீசை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Actor Kamal haasans Indian 2 movie shooting spot scene leaked in social media

கமலின் இந்தியன் படம்: நடிகர் கமல்ஹாசன் -ஷங்கர் காம்பினேஷனில் கடந்த 1996ம் ஆண்டில் வெளியானது இந்தியன் படம். கமலுடன் இந்தப் படத்தில் சுகன்யா, மணிஷா கொய்ராலா, கஸ்தூரி, கவுண்டமணி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். படம் சூப்பர்ஹிட் அடித்த நிலையில், தற்போது ஆண்டுகள் பல கடந்து இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் மீண்டும் கமல் -ஷங்கர் காம்பினேஷனில் உருவாகியுள்ளது. கடந்த 2017ம் ஆண்டிலேயே இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்ட நிலையில், இடையில் சில காரணங்களால் முடங்கியது.

இந்தியன் 2 படம்: இதனிடையே இந்தப் படம் மீண்டும் தூசி தட்டப்பட்டு கடந்த ஆண்டில் சூட்டிங் துவங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படம் அடுத்த ஆண்டில் கோடைக் கொண்டாட்டமாக ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகளை தயாரிப்பு தரப்பு விரைவு படுத்தியுள்ளது.

இந்தியன் 2 அறிமுக வீடியோ: இந்தப் படத்தின் மூன்றாவது பாகமும் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், அடுதத ஆண்டிலேயே தீபாவளி ரிலீசாக இந்தியன் 3 படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தியன் 2 படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாக ரசிகர்களை கவர்ந்த நிலையில், கமல் பிறந்தநாளையொட்டி இந்தப் படத்தின் அறிமுக வீடியோ கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இதில் சேனாபதியின் கேரக்டர் வெளிப்படுத்தப்பட்டது.

Actor Kamal haasans Indian 2 movie shooting spot scene leaked in social media

இணையத்தில் லீக்கான சூட்டிங் ஸ்பாட் வீடியோ: முன்னதாக கமல் -ஷங்கர் இணைந்திருக்கும் சூட்டிங் ஸ்பாட் புகைப்படமும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையதளத்தில் லீக்காகியுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ அதிகமாக பரவிவரும் நிலையில், படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த வீடியோ ஐதராபாத்தில் நடந்த சூட்டிங்கின்போது எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்தியன் 3 படம்: அடுத்தடுத்த படங்களில் நடிகர் கமல்ஹாசன் கமிட்டாகி வருகிறார். இந்தியன் 2 படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துள்ள அவர், அடுத்ததாக உருவாகவுள்ள இந்தியன் 3 படத்தின் பேட்ச் வேலைகளுக்காகவும் தன்னுடைய கால்ஷீட்டை ஒதுக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இரண்டாவது பாகத்தை எடுத்தபோதே 3வது பாகத்திற்காக காட்சிகளையும் ஷங்கர் சேர்த்து எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X