Indian 2 movie: சர்வதேச அளவில் நடக்கும் இந்தியன் 2 பிரமோஷன்கள்.. மலேசியாவில் கமல் & டீம்!

சென்னை: நடிகர் கமல்ஹாசன் வில்லனாக மிரட்டியுள்ள கல்கி 2898 ஏடி படம் நேற்றைய தினம் சர்வதேச அளவில் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் வரும் ஜூலை 12ம் தேதி ரிலீசாகவுள்ளது. சில தினங்கள் இடைவெளியில் கமலின் அடுத்தடுத்த படங்கள் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது அவரது ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்துள்ளது.

கடந்த சில வாரங்களாக கல்கி 2898 ஏடி படத்தின் பிரமோஷன்களில் பிசியாக காணப்பட்ட கமல்ஹாசன் அடுத்ததாக இந்தியன் 2 படத்தின் ப்ரோமோஷன்களில் சிறப்பாக பங்கேற்று வருகிறார். சர்வதேச அளவில் இந்தப் படத்தின் பிரமோஷன்களை படக்குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில் தற்போது படக்குழுவினர் மலேசியா சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Kamal haasan Indian 2 movie Shankar


இந்தியன் 2 படம்: நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடித்துள்ள கல்கி 2898 ஏடி படம் நேற்றைய தினம் சர்வதேச அளவில் ரிலீசாகியுள்ளது. படத்தில் அவருக்கு காட்சிகள் மிக குறைவாகவே காணப்படுகிறது. இதனிடையே இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தில்தான் தனக்கு வேலை அதிகம் என்று அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார். ஆயினும் அவரது கெட்டப் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனிடையே, இன்னும் சில தினங்களில் கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் ரிலீசாகவுள்ளது. வரும் ஜூலை 12ம் தேதி படம் ரிலீசாகவுள்ள நிலையில் அடுத்தடுத்து கமல்ஹாசனின் படங்கள் சில தினங்கள் இடைவெளியிலேயே ரிலீசாவது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Kamal haasan Indian 2 movie Shankar


ஜூலை 12ம் தேதி ரிலீஸ்: 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது இந்தியன் 2 என ரிலீசாகவுள்ளது படத்திற்கு மிகப்பெரிய அளவிலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டிலேயே இந்தியன் 2 படத்தில் படப்பிடிப்பு துவங்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து, தயாரிப்பு தரப்பினருடன் இயக்குனர் ஷங்கருக்கு ஏற்பட்ட மனக்கசப்பு மற்றும் கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த படத்தின் சூட்டிங் முடங்கியது. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டில் மீண்டும் துவங்கப்பட்டு தற்போது படம் இன்னும் சில தினங்களில் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

இந்தியன் 2 பிரமோஷன்கள்: இந்த படத்தின் ப்ரோமோஷன்களை சர்வதேச அளவில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். கடந்த 1ம் தேதி படத்தின் இசை வெளியீடு மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் நிகழ்ச்சி மும்பையில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. படத்தின் ட்ரெயிலர் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. படத்தின் பிரமோஷன்கள் சர்வதேச அளவில் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தற்போது கமல் உள்ளிட்ட படக்குழுவினர் மலேசியாவிற்கு படத்தின் ப்ரோமோஷனுக்காக பயணமாகி உள்ளனர். அங்கு ரசிகர்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

Kamal haasan Indian 2 movie Shankar

மலேசியாவில் கமல் & டீம்: இதையடுத்து ஜூலை முதல் வாரத்தில் ஐதராபாத்தில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியும் திட்டமிடப்பட்டுள்ளது. அனிருத் இசையில் படத்தின் அடுத்தடுத்த லிரிக் வீடியோ பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளன. கடந்த சில வாரங்களாக கல்கி படத்தின் ப்ரோமோஷன்களில் மிகவும் உற்சாகமாக கலந்து கொண்டார் கமல்ஹாசன். இந்நிலையில் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தின் ப்ரோமோஷன்களில் அவர் பங்கேற்று வருகிறார். அவருடன் இயக்குனர் ஷங்கர், நடிகர் சித்தார்த் உள்ளிட்டவர்களும் இணைந்து அடுத்தடுத்த பேட்டிகளையும் கொடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X